tamilnadu

img

நண்டலாறு கரையை உடைத்து மணல் கொள்ளை

வேடிக்கை பார்க்கும் தமிழக, புதுச்சேரி அதிகாரிகள்

தரங்கம்பாடி, செப்.4- நாகை மாவட்டம்,தரங்கம்பாடி வட்டம்,சங்கரன்பந்தல் அருகேயுள்ள அரசளங்குடி கிராமத்தையொட்டி செல்லக்கூடிய நண்டலாறு என்கிற ஆற்றின் கரையை உடைத்து கடந்த பல மாதங்களாக அப்பகுதியில் வசிக்கும் சிலர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.  தமிழகம்-புதுச்சேரி ஆகிய இரு மாநில எல்லை வழியாக செல்லக்கூடிய நண்டலாற்றில் பல மாதங்களாக இரவு நேரங்களில் பொக்லைன் எந்திரம் மூலம் கரைப்பகுதியை உடைத்து மணலை ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான டிராக்டர், டிப்பர்களில் கடத்தி வரு கின்றனர். இரு மாநில எல்லை என்பதால் அதிகாரிகள் ஒருவரையொருவர் சாட்டி வருகின்றனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அரசளங்குடி, புத்தகரம், முனிவேலங்குடி, அரிஹரன்கூடல் பகுதிகளில் உள்ள 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்களும் நீரில் மூழ்கி போவதோடு, பல்லாயிரக்க ணக்கான மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவர். மேலும் ஆற்றை யொட்டிய பகுதியில் நிலச்சரிவும் ஏற் படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் அச்சத்துடன் கூறுகின்றனர். உடனடியாக சம்பந்தப்பட்ட இரு மாநில அதிகாரிகள்ஆற்றின் கரையை சேதப்படுத்தி வருகிற மணல் கொள்ளை யர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு மென கோரிக்கை விடுத்துள்ளனர்.

;