tamilnadu

img

சென்னையில் தென்னிந்திய மக்கள் நாடக விழா

சென்னையில் கோலாகலமாகத் துவங்கியது

சென்னை, அக். 2 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும், சென்னை கேரள சமாஜமும் இணைந்து நடத்தும் தென்னிந்திய மக்கள் நாடக விழா புதனன்று (அக்.2) சென்னையில் கோலாகலமாக தொடங்கியது. இந்த விழா அக்டோபர் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாடக விழாவின் தொடக்கமாக கீழ்ப்பாக்கம் ஆர்ம்ஸ் சாலையிலிருந்து கலைஞர்களின் பேரணி நடைபெற்றது. மூத்த நாடக கலைஞர்கள் ஜே.கமலா, காஞ்சி சிவராஜ் தலைமையேற்க, மூத்த நாடகக் கலைஞர் கண்ணப்ப காசி தொடங்கி வைத்தார்.  நாட்டுப்புற கலைச்சுடர் முனுசாமி ஒருங்கிணைப்பில் பாப்பம்பாடி ஜமா பெரிய மேளம், தீபா ஒருங்கிணைப்பில் பெண்கள் சிலம்பாட்டம், சங்கர்பாபு ஒருங்கிணைப்பில் பாரதியார் சிலம்பு பயிற்சி பள்ளி மாணவர்கள் மற்றும் சரத் குழுவினரின் சிலம்பாட்டத்தோடு பேரணி நடைபெற்றது.

நாடக விழா நடைபெறும் (கேரள சமாஜம் பள்ளி) அரங்கிற்கு நாடக, திரைக் கலைஞருமான கிரிஷ் கர்னாட் வளாகம் என பெயரிடப்பட்டுள்ளது. அந்த வளாகத்தை பண்பாட்டுத்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் திறந்து வைத்தார். திரைக்கலைஞர் சச்சு, மனோ ரமா அரங்கையும், நாடக ஆசிரியர் அகஸ்டோ, ஞாநி அரங்கையும், கூத்துப் பட்டறை தலைவர் மு.நடேஷ், முகில் அரங்கையும், எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி, ந.முத்துசாமி அரங்கையும் அவர்களது உருவப்படங்களையும் திறந்து வைத்தனர். மோகன்தாஸ் வட கராவின் புகைப்படக் காட்சியை திரைக் கலைஞர் நாசர் திறந்து வைத்தார். இதனையொட்டி நடைபெற்ற தொடக்கவிழா நிகழ்வுக்கு விழாக்குழுத் தலைவர், திரைக்கலைஞர் ரோகிணி தலைமை தாங்கினார். விழாக்குழுச் செயலாளர்- நாடகவியலாளர் பிரளயன் வரவேற்றார். இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தொடக்கவுரையாற்றினார். பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், கவிஞர் தேவேந்திரபூபதி, கேரள சமா ஜம் தலைவர் பி.கே.என்.பணிக்கர், தமுஎகச தலைவர் சு.வெங்கடேசன் எம்.பி., பொதுச் செயலாளர் ஆதவன் தீட் சண்யா, எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோர் பேசினர். குலோத்துங் கன் உதயகுமார் நன்றி கூறினார். இதனைத் தொடர்ந்து நாடகங்கள் அரங்கேற்றம் நடைபெற்றது.

(மேலும் செய்தி, படங்கள்: பக்கம் 3,8)

;