tamilnadu

img

மலக்குழி மரணங்களை தடுத்திடுக

கோவை, ஜூலை 28 -  மலக்குழி மரணங்களை தடுத் திட தமிழகம் முழுவதும் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கோவையில் ஆதித்தமி ழர் பேரவையின் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மலக்குழி மரணங்களை தடுத்திட மலக்குழிகளைத் தடைசெய்து தமிழ கம் முழுவதும் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.  புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் இல்லம்  சேதப்படுத்தியது  கண்ட னத்துக்குரியதும், அவருடைய இல் லத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்திட வேண்டும். மனித உரிமைப் போராளிகள் ஆனந்த டெல்டும்டே, வரவர ராவ் உள்ளிட் டோரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இவ் வமைப்பின் நிறுவனத் தலைவர் அதியமான் தலைமை தாங்கினார். இதில் மாநில பொதுச்செயலாளர் கோவை ரவிக்குமார்,  மாநகர் மாவட்டச் செயலாளர் ஜோதி முத்துக் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.