சென்னை, மார்ச் 9- சட்டமன்ற திமுக உறுப்பி னர்கள் கே.பி.பி.சாமி, காத்த வராயன் மற்றும் முன்னாள் அமைச்சர் க.அன்பழகன் ஆகி யோர் மறைவுக்கு சட்டப்பேர வையில் திங்களன்று(மார்ச் 9) இரங்கல் தெரிவிக்கப்பட் டது. இதனையடுத்து, பேரவை அலு வல் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 14 ஆம் தேதி தொடங்கி யது. அன்று 2020-2021 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை துணை முத லமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதன்மீது 4 நாட்கள் விவாதம் நடந்தது. பின்னர், பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மானிய கோரிக்கை விவாதங்க ளுக்காக மார்ச் 9 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 9 ஆம் தேதி வரை 23 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தை நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
6 நிமிடத்தில்....
அதன்படி தமிழக சட்டப் பேரவை திங்களன்று (மார்ச் 9) காலை 10 மணிக்கு கூடியது. பேரவைத் தலைவர் ப.தனபால் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். அப்போது “திரு வள்ளூர் மாவட்டம் திருவொற்றி யூர் சட்டமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக 2016 ஆம் ஆண்டு தேர்வு செய் யப்பட்ட கே.பி.பி.சாமி, கடந்த 2006 ஆம் ஆண்டில் முதன் முறையாக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 2011 ஆம் ஆண்டு வரைக்கும் மீன் வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். அதேபோல், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் 2019 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ். காத் தவராயன் சிறப்பாக பணியாற்றி னார். இப்பேரவையின் உறுப்பி னர்கள் இருவரது மறைவுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரி வித்தார்.
முன்னாள் அமைச்சரும் திமுக பொதுச் செயலாளரு மான க. அன்பழகன், முன்னாள் எல்எல்ஏ சந்திரன் ஆகியோர் மறைவுக்கும் இரங்கல் குறிப்பை வாசித்தார். பின்னர் சட்டப்பேரவையை புதன் கிழமை (மார்ச்11) வரை ஒத்தி வைத்தார். இந்தக் கூட்டம் 6 நிமிடத்தில் முடிவடைந்தது.