tamilnadu

img

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் சாய்னா, சிந்து அவுட்

மலேசியாவில் பெரோடுவா மாஸ்டர்ஸ் என்ற பெயரில் சர்வதேச பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.   ரூ. 2.85 கோடி பரிசுத்தொகையைக் கொண்டுள்ள இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவைத் தவிர மற்ற பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர்- வீராங்கனைகள் ஏற்கெனவே வெளியேறிவிட்ட நிலையில், பார்ம் பிரச்சனையில் சிக்கியிருக்கும் பி.வி. சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் கடுமையாகப் போராடி நாட்டிற்காகக் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.  உலக சாம்பியன் பட்டம் வென்ற பின் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சிந்து தனது காலிறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான சீன தைபேவின் டாய் டீஸுவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே டிராப் ஷாட்களில் அசத்திய டாய் 21-16, 21-16 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். பார்ம் பிரச்சனையை இந்த ஆட்டத்தில் தீர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சிந்து சோகத்துடன் நடையைக் கட்டினார்.   இதேபோல திருமண வாழ்க்கையை தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை திணறலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சாய்னா ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயினின் கரோலினா மரீனிடம் 8-21,7-21 என்ற செட் கணக்கில் படுதோல்வியைச் சந்தித்தார். இது பேட்மிண்டன் உலகில் நட்சத்திர வீராங்கனை சாய்னா சந்திக்கும் மோசமான தோல்விகளில் ஒன்றாகும். 

;