வேலூர், நவ.25- மாநிலம் முழுவதும் காலியாகவுள்ள 44 ஆயிரம் பணியிடங்களுக்கு முதற்கட்டமாக 5 ஆயிரம் பேர் நியமிக்கப்படவுள்ளனர். இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு, இன்று முதல் வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி வரை நேர்முகத் தேர்வுகள் நடைபெறுகிறது. வேலூர் மாவட்டம் காட்பாடியில் காலை 8 மணிக்கு தொடங்கிய இத்தேர் வில், விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் கள் சரிபார்க்கப்பட்டன. பின்னர், முதன்மை தலைமைப் பொறியாளர் நந்தகோபால் தலைமையில், மின் கம்பத்தின் மேல் ஏறி மின்சார ஒயர்களை அமைப்பதற்கான அமைப்புப் பணிகளையும் விண்ணப்ப தாரர்கள் செய்துகாண்பித்தனர். இதேபோன்று வேலூர் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட வேலூர், கிருஷ்ண கிரி, தருமபுரி, திருப்பத்தூர் ஆகிய மையங் களில் இன்று தேர்வு நடைபெற்றது. இதில் பெண்களும் பங்கேற்றனர்.