tamilnadu

img

ஜெயா டிவி குழுவினர் மீது போலீசார் தாக்குதல்

சென்னை, ஆக. 17- அத்திவரதர் தரிசனம் நேரடி ஒளிபரப்பில் ஈடுபட்டிருந்த ஜெயா டிவி குழுவினர் மீது போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து டியுஜெ வின் மாநிலத் தலை வர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனம் வெள்ளி யன்று நிறைவடைவதை ஒட்டி செய்தி சேக ரிப்பதற்காக சென்னையிலிருந்து ஜெயா  டிவி செய்தியாளர் ராஜேஷ் ஒளிப்பதிவாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் காஞ்சிபுரம் சென்று  இருந்தார்கள். காலை முதல் அத்திவரதர் தரிசனத்திற்காக வந்த பொதுமக்கள், மாவட்ட  நிர்வாக பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்  பொன்னையா தீயணைப்புத்துறை அதிகாரி கள் பிரியா ரவிச்சந்திரன்சத்தியசீலன்காஞ்சி புரம் வரதராஜ பெருமாள் கோயில் தலைமை பட்டாச்சாரியர் கிட்டு உள்ளிட்டோரிடம் ஜெயா டிவி சிறப்பு நேர்காணலை நடத்தி னார்கள். அது வெள்ளியன்று காலை முதல்  ஜெயா டிவி தொலைக்காட்சியில் நேரலை யாக ஒளிபரப்பானது.

இந்நிலையில் வெள்ளியன்று இரவு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதை படம்  எடுத்துவிட்டு வெளியே வரும்போது காவல் துறை தலைமை காவலர் ஒருவர் இந்த வழி யாக செல்ல முடியாது, நீங்கள் யார்? என்று  கேட்க ஜெயா டிவி ரிப்போர்ட்டர் என  ராஜேஷ் பதில் அளித்தார். மிக தரக்குறை வான வார்த்தைகளை பிரயோகித்ததால் இது  தவறு என செய்தியாளர் குறிப்பிட்டபோது அங்கிருந்த எஸ்.பி.வருண்குமார் செய்தி யாளரையும், படம்பிடித்த ஒளிப்பதிவாளரை யும் கண்மூடித்தனமாக தாக்கி கேமராவை யும் அடித்து நொறுக்கினார்.

இந்த சம்பவத்தை தமிழ்நாடு பத்திரிகை யாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிப்பது டன் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் மேலும் அவர்க ளுக்கு நஷ்ட ஈடு வழங்கவும், உடைக்கப் பட்ட கேமராவை வாங்கி தரவும் உரிய ஏற்பாடு  செய்யுமாறு சங்கம் கோரிக்கை வைக்கின்றது. இத்தாக்குதலில் ஈடுபட்ட ஐபிஎஸ் அதி காரி வருண்குமார் மற்றும் தலைமை காவ லர்கள் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமி, காவல்துறை தலைவர் திரிபாதி ஆகியோரை  தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;