tamilnadu

img

தமிழக பொருளாதாரத்தை மீட்க குழு

சென்னை,மே 9- பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஆலோசனை வழங்க, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தலைமையில் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்தக்குழு மூன்று மாதத்திற்குள் அரசிடம் அறிக்கை அளிக்கும். நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், முன்னாள் தலைமைச் செயலாளர்கள் என்.நாராயணன்,  வெள்ளையன், முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் என்.சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் வேணுசீனிவாசன், டிவிஎஸ் மோட்டார்ஸ் பத்மஜாசுந்துரு  உட்பட 24 பேர் கொண்ட இக்குழுவில், பொருளாதார வல்லுநர்கள், தொழில்துறையினர், யுனிசெப் உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினர் இடம்பெற்றுள்ளனர்.