tamilnadu

img

கோவை கேஜி மருத்துவமனையில் மத பாகுபாடு பார்ப்பதாக குற்றச்சாட்டு

ஆட்சியர்  தலையிட பி.ஆர்.நடராஜன் எம்.பி வலியுறுத்தல்

கோவை, மே 1- இஸ்லாமியர் என்பதால் கர்ப்பிணி பெண்ணுக்கு கேஜி மருத்துவமனை சிகிச்சையளிக்க முடியாது என மருத்துவமனை ஊழியர் ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது. இது தொடர்பாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து கோவை மாவட்ட ஆட்சியரை உடனே தொடர்புகொண்ட பி.ஆர்.நடராஜன் எம்.பி ,இப்பிரச்சனையில் உடனடியாக தலையிடுமாறு கேட்டுக்கொ ண்டார். இதன்பேரில் சம்பந்தப்பட்ட கேஜி மருத்துவ மனைக்கு சுகாதார துறை இணை இயக்குனர் தலைமையிலான குழுவை அனுப்பி ஆய்வு மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கூறுகையில், அனைத்து தனியார் மருத்துவ மனைகளிலும் பாரபட்சம் பார்க்காமல்  நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முன்வரவேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளோம். இதனை மீறும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

முன்னதாக , கேஜி மருத்துவமனையில் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மருத்துவமனையின் ஊழியர் இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத்துடன் நெருக்கமாக உள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.