tamilnadu

img

பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை கைவிடுக

மாவட்ட வருவாய் அலுவலரிடம் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

தருமபுரி, பிப். 3- தருமபுரி அருகே சிவாடி கிரா மத்தில் இந்துஸ்தான் பெட்ரோலி யம் சுத்திகரிப்பு நிலையம் அமைக் கும் முயற்சியை கைவிட வேண் டும் என பாதிக்கப்பட்ட விவசாயி கள், தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி ஒன்றியம், சிவாடி கிராமத் தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தலித் மற்றும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த வர்களாவார்கள். இவர்கள், சிறு, குறு விவசாயிகள். அரை ஏக்கர் முதல் 2 ஏக்கர் வரை விவசாய நிலம் வைத்துள்ளனர். இவர்கள் இந் நிலத்தை வாழ்வாதாரமாக கொண்டு ஆடு, மாடு மேய்த்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் (எச்.சி.எல்) இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட், சிவாடி கிராம நிலத்தில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவெடுத்துள்ளது. இவை அமைக்கப்பட்டால் சொந்த ஊரி லேயே இம்மக்கள் அகதிகளாக மாற்றப்படுவார்கள். இவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக் கப்படும். எனவே, இந்த மக்களை சொந்த நிலத்தில் இருந்து வெளி யேற்றும் முயற்சியை அரசு கைவிடவேண்டும். சிவாடி மக்க ளின் வாழ்வாதாரத்தை பறிக்கும்  (எச்.சி.எல்) இந்துஸ்தான் பெட் ரோலியம் கார்ப்பரேசன் லிமி டெட், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப் பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் தலைமையில் தொடர்ந்து போராடி வருகின்ற னர். இதுதொடர்பாக கடந்த ஜன.26 ஆம் தேதியன்று நடை பெற்ற கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைமீறி கடந்த ஜன. 29 ஆம்  தேதியன்று சிவாடி கிராமத்தில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நிலம் கையகப்ப டுத்த நிலத்தை அளவீடு செய்ய வந்த வட்டாட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு விவசாயி கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆகவே, சிவாடி கிராம விவசாயி களின் வாழ்வாதார நலன் கருதி பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலை யம் அமைப்பதை வேறு இடத் துக்கு மாற்றவேண்டும் என தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் டி.ரவீந் திரன், மாவட்டத் தலைவர் கே.என்.மல்லையன், மாவட்டச் செயலாளர் சோ.அருச்சுணன், மாவட்ட துணைசெயலாளர் எஸ். எஸ்.சின்னராஜ், சிவாடி ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் கே.குப்புசாமி, கிளை செயலாளர் ரமேஷ் சிவகுரு, லஷ்மனண், வாசு, முத்து ஆகியோரும், பாதிக் கப்பட்ட விவசாயிகளும் கோரிக்கை மனுவை அளித்து முறையிட்டனர்.

;