tamilnadu

img

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக 51 கிராமங்கள்

கடலூர், மே 4- கடலூர் மாவட்டத்தில் கூடுதலாக  51 கிராமங்கள் கட்டுப்ப டுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா  பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு  அமலில் இருந்து வருகிறது. இத்தொற்றினை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் தொற்றுக்கு உட்பட்டவர்கள் வசிக்கும் பகுதியை தனி மைப்படுத்துவதோடு வசிப்பிடத்திலிருந்து 7 கி.மீ தூரத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படுகின்றன. இதன்படி, கடலூர் மாவட்டத்தில் 5 நகராட்சிகளும், 8 பேரூராட்சி கள், சுமார் 250 ஊராட்சிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறி விக்கப்பட்டன.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து கடலூர்  மாவட்டத்திற்கு திரும்பிய 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்த கிராமங்கள் மற்றும் 7 கி.மீ  சுற்றளவிற்குட்பட்ட கிராமங்கள் கட்டுப்படுத் தப்பட்ட  பகுதிகளாக அறி விக்கப்பட்டுள்ளன. இதன்படி, திட்டக்குடி வட்டம்  தொண்டங்குறிச்சியில் கொரோனா உறுதிப்படுத் தப்பட்டததால் அதனைச் சுற்றியுள்ள திட்டக்குடி வட்டத்தைச் சேர்ந்த புல்லூர், கழுதூர், சிறுகரம்பலூர், பாசார், ஆவட்டி, கீழாதனூர், மேலாதனூர் உள்ளிட்ட 13 கிராமங்களும், வேப்பூர் வட்டத்தில் சிறுநெசலூர், வேப்பூர், என்.நாரையூர், பூலாம்பாடி, பெரியநெசலூர்,நிராமணி உள்ளிட்ட 14 கிராமங்களும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கடலூர் வட்டம் சி.என்.பாளையத்தில் 8 பேருக்கு கொரோனா உறுதிப்ப டுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடலூர் வட்டத்திற்குட்பட்ட  சி.என்.பாளை யம், நடுவீரப்பட்டு, விலங்கல் பட்டு, வானமாதேவி, வெள்ளக்கரை  ஆகிய 5 கிராமங்களும், பண்ருட்டி வட்டத்தில் 19 கிராமங்கள் கட்டுப்ப டுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிர்ச்சி

சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து திரும்பிய வர்கள் தனி மைப்படுத்தப் பட்டு உள்ளனர். இவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனை களில் ஒரே நாளில் 107 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இது வரை கோயம்பேட்டில்  இருந்து வந்த 129 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

மேலும் 430 பேருக்கு கொரோனா பரிசோதனைக் கான முடிவு வரவேண்டி உள்ளது. இதனால் இந்த எண்ணிக்கை மேலும் அதிக ரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.