சென்னை,மார்ச் 3- 3 பேரை பலி கொண்ட இந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்து தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனிடம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்தியன் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட கிரேன் விபத்தில் 3 பேர் உயிரிழந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குநர் ஷங் கரிடம் கடந்த வாரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், நடிகர் கமலஹாசன் விசார ணைக்கு ஆஜராகினார். அவரிடம் சுமார் 3 மணி நேர விசாரணை நடந்தது. பிறகு, செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், காவல்துறையினருடனான கலந்துரையாடலின்போது, படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவங்களை கோர்வையாக எடுத்துரைத்த தாக தெரிவித்தார்.