tamilnadu

img

மக்கள் தொகை பதிவேடு பீகாரில் மே 15-இல் துவங்கும்... சுஷில்குமார் மோடி சொல்கிறார்

பாட்னா:
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கியஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது நிதிஷ்குமார் ஆதரவு அளித்தார். அந்த கட்சியின் துணைத் தலைவரும், அரசியல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் இதற்கு எதிர்ப்புதெரிவித்தார்.இதை தொடர்ந்து தேசிய குடியுரிமை பதிவேட்டை (என்.ஆர்.சி.) பீகாரில் அமல்படுத்த மாட்டோம் என்று நிதிஷ்குமார் அறிவித்தார்.தேசிய குடியுரிமைச் சட்டம் (சி.ஏ.ஏ.), தேசிய குடியுரிமை பதிவேடு (என்.ஆர்.சி.) தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) ஆகிய மூன்றுக்கும் வேறுபாடு இல்லை;அவை ஒன்றுதான் என்று பிரசாந்த் கிஷோர் விமர்சித்து இருந்தார்.இந்த நிலையில் பீகாரில் தேசிய மக்கள் தொகை பதிவேடு பணி மே 15 முதல் தொடங்கும் என்று துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில்குமார் மோடி அறிவித்துள்ளார். தேசிய மக்கள் தொகை பதிவேடு பணியில் ஈடுபட மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மிரட்டியுள்ளார்.

;