tamilnadu

img

பீகாரிலும் அடி வாங்கிய பாஜக - ஜேடியு கூட்டணி!

பாட்னா:
பீகார் மாநிலத்தில், காலியாக இருந்த 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், அதில் 4 தொகுதிகளில் பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது.ஆளும் ஐக்கிய ஜனதாதளம் நாளந்தா தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.ஐக்கிய ஜனதாதளம் கட்சி, சிம்ரி பக்தியார்பூர் தொகுதியை, சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், பேல்ஹார் தொகுதியை சுமார் 19 ஆயிரம் வாக்குகள்வித்தியாசத்திலும் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியிடம் பறிகொடுத்துள்ளது. அதுமட்டுமல்ல, தாருண்தா தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரிடம் சுமார் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளது.இதேபோல பாஜக- அது போட்டியிட்ட கிஷன்கஞ்ச் தொகுதியில் அசாதுதீன் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி வேட்பாளர் ஹம்ரூல் ஹூடாவிடம் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளது.இந்த தோல்வி பாஜக - ஜேடியுகூட்டணியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. “தேர்தல் தோல்விகள் என்பது வழக்கமானதுதான். ஒரு தேர்தலில் தோற்போம், அடுத்த தேர்தலில் வெல்வோம். இதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் தோல்விக்கானகாரணத்தை ஆராய வேண்டும்”என்று ஐக்கிய ஜனதாதளம் தலைவரும் மாநில முதல்வருமான நிதீஷ் குமார் கூறியுள்ளார்.

;