tamilnadu

img

கபில் மிஸ்ரா கும்பலின் ஆத்திரத்திற்கு காரணம் இதுதான்... தில்லியில் கலவரம் தூண்டியது ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல்களே - 4

ஆலம் மற்றும் இதரர்கள் தயால்பூர்காவல் நிலையத்தில் அடைக்கப் பட்டிருந்த போது, இந்து கும்பல்கள்வடகிழக்கு தில்லியில் சூறையாடிக் கொண்டிருந்தனர், முஸ்லிம்களின் வீடுகளையும் சொத்துகளையும் குறிவைத்து தாக்கிக் கொண்டிருந்த னர். ஐம்பதிற்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட னர், அதில் ஆகப் பெரும்பான்மையானவர்கள் முஸ்லீம்கள். சிலர் அடித்து கொல்லப்பட்டனர். சிலர் சுடப்பட்டும் சில கத்தியால் குத்தியும் கொல்லப்பட்டனர். கேரவன் பத்திரிக்கை வெளியிட்ட ஒரு காணொலியில் ஒரு இந்து நபர்எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி, அந்த தாக்குதல்களில் பங்கேற்றது குறித்தும், 3 முஸ்லீம்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதை பார்த்ததாகவும் தெரிவித்தான்.ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் தங்கள் வீடுகளை இழந்தனர், அல்லது அச்சத்தில் தங்கள்வீடுகளை விட்டு விட்டு வெளியேறினர். முஸ்லீம்களால் நடத்தப்பட்ட வணிக நிறுவனங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. கலவரங்கள் முடி வடைந்த பின் இவற்றில் பெரும்பாலானவை எரிந்தும், தீயில் கருகியும் இருந்தன, அதற்கு அடுத்த கடையாக இருந்த இந்துக்களின் கடைகள் எவ்வித சேதாரமும் இன்றி அப்படியே இருந்தன. ஏராளமான பள்ளிவாசல்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன.

மூடி மறைக்கும் விசாரணைகள்
இந்திய குடியரசின் உள்ளார்ந்த அம்சமாக, பெரும் மதக் கலவரங்களில் வன்முறைகள், குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து நடக்கிறது. பிப்ரவரி வன்முறைகள் மேற்கொள்ளப்பட்ட விதம் தேசத்தின் தலைநகரில் 1984ல் இந்துகும்பல்கள் சீக்கியர்களுக்கு எதிராக நடத்திய வன்முறைகளையும், 2002ல் குஜராத்தில் இந்து கும்பல்கள் ‘குறைந்தபட்சம்’ 700 முஸ்லீம்களை கொன்று குவித்தது போன்றவற்றின்  அம்சங் களை பிரதிபலிப்பதாகவே இருந்தது. இரண்டு கலவரங்களிலும், ஏராளமான அறிக்கைகள் அரசியல் தலைவர்கள் மற்றும் காவல்துறை இத்தகைய படுகொலைகளில் நேரடி பங்குபெற்றதை சுட்டி காட்டுவதாகவும், ஏராளமானஅதிகாரப்பூர்வ விசாரணைகள் அவர்களின் பங்கை மூடிமறைப்பதற்காகவே முயன்றதை யும் காண முடிகிறது.தில்லியில் பிப்ரவரியில் நடைபெற்ற வன்முறைகளுக்கு முன்பாக பல ஆண்டுகளாக இந்திய முஸ்லீம்களை களங்கப்படுத்துதல் நடைபெற்றது, அதனை தூண்டியது இந்துத்வா சக்திகள், பாஜகவின் தத்துவார்த்த தலைமை பீடமான ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங். சிஏஏவுக்கு எதிரான போராட்டங்கள், ஒரு இந்துத்வா திட்டத்திற்கு எதிராக ஒரு மிக வலுவான ஒருங்கிணைந்த வெளிப்பாடு என்பதே கபில் மிஸ்ராவை அந்தளவுக்கு ஆத்திரம் கொள்ள செய்தது.பாஜக மற்றும் தில்லி காவல்துறை ஆகியவற்றின் பங்கெடுப்பு மற்றும் உடந்தையாக இருந்ததிற்கு அந்த தாக்குதல்கள் நடைபெற்ற போதும், அதன் பின்னரும், ஏராளமான ஆதாரங்கள்  உள்ளன.

தப்பிப்பிழைத்தவர்களின் சாட்சியம்
தாக்குதலுக்கு ஆளாகி உயிர்பிழைத்த வர்கள் மற்றும் நேரடி சாட்சியங்கள் சுமார் இரண்டு டஜன் (24) பேர் அந்த வன்முறை நடைபெற்ற போதும் அதற்கு பின்னரும்,  அவர்கள் காவல் நிலையத்திற்கு சென்று தங்களுக்கு நேர்ந்த சம்பவங்களை அதிகாரப்பூர்வமான விரிவான புகாராக பதிவு செய்ய, அல்லது அதற்கானமுயற்சியின் அனுபவங்கள் குறித்து நம்மிடம் தெரிவித்தனர். கிட்டத்தட்ட அவர்கள் அனைவருமே திருப்பி அனுப்பப்பட்டார்கள்; பல சமயம்ஏராளமான வசவுகளுடன், இன்னும் சிலர் அவர்கள் கட்டாயம் தங்கள் புகார் வாங்கப்பட வேண்டும் என வற்புறுத்தினால் அவர்களை ஏதாவது வழக்குகளில் இணைத்துவிடுவோம் என்ற மிரட்டலுடன் திருப்பி அனுப்பப்பட்டனர். அதையும் மீறி புகார்கள் பெறப்பட்ட போது,  முக்கியமான தகவல்களான காவல் துறை மற்றும் அரசியல்வாதிகளின் பங்கு பற்றி, அதில் குறிப்பிடப்பட்டால், அதில் காவல்துறை அதிகாரிகள் மற்றும்பாஜக தலைவர்கள் பெயர் இருந்தால் அவற்றை காவல்துறை கட்டாயம் நீக்கிவிட்டு
தான் பெற்றுக் கொண்டது.

ஏராளமான முஸ்லீம்கள் தங்களின் புகார் மனுக்களை, முஸ்தபா பாத் ஈத்கா மைதானத்தில்அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நிவாரண முகாம்களில் மார்ச் மாதம் முழுவதும் தங்க வைக்கப்பட்டிருந்தார்களே, அங்கு இருந்த காவல் உதவி மையத்திலேயே பதிவுசெய்தனர்.அந்த புகார்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காவல் நிலையங்களின் முத்திரைகளைக் கொண்டிருந்தன. அவை அந்த காவல்நிலைய எல்லைகளை  குறிக்கிறது. இதில் பலபுகார்கள், நகல் எடுக்கப்பட்டதாகவும், அவற்றின்நகல் பிரதம மந்திரி அலுவலகத்திற்கும், உள்துறை அமைச்சகத்திற்கும், தில்லி துணைநிலைய ஆளுநர்  அனுப்பப்பட்டதாகவும் மற்றும் பல்வேறு காவல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் குறிக்கப் பெற்றிருந்தன.பிப்ரவரி முதல் வடகிழக்கு தில்லியில் குடியிருப்பவர்களின் பெயரால் காவல்நிலையத் தில் பதிவு செய்யப்பட்ட ஏராளமான புகார்கள் “கேரவன்” வசம் உள்ளன. பல குடியிருப்போர்கள் காணொலி பேட்டிகள் மூலம் தாங்கள் அளித்த புகார்களின் தகவல்களை உறுதிப்படுத்திசாட்சியம் கூறினர், அந்த புகார்களை திரும்பப்பெறுமாறு காவல்துறை நிர்பந்தப்படுத்தி யதையும் தெரிவித்தனர்.

புகார் கொடுத்த ஒரு பெண்மணி, 3 உயர்காவல் அதிகாரிகள் தான் இருப்பதற்கு அருகில்உள்ள சாந்த் பாக் பகுதியில் போராட்டக் காரர்களை நோக்கி சுட்டு அவர்களைக்கொன்ற தாக எழுதியுள்ளார். மற்றொருவர், ஒரு துணைஆணையர் பாஜகவின் கபில் மிஸ்ராவிடம்கீழ்கண்ட வாக்குறுதியை அளித்ததைதான் நேரடியாக கேட்டதாக தெரிவித்துள்ளார்: “கவலைப்படாதீர்கள், நாங்கள் சாலைகளெங் கும் அவர்களின் இறந்த  உடல்கள் கிடக்கும்வகையில் செய்துவிடுவோம், இனி தலைமுறைக்கும் அவற்றை அவர்கள் எண்ணி பார்க்க வேண்டிய அளவிற்கு நாங்கள் செய்துவிடுவோம்” என தெரிவித்ததாக எழுதியுள்ளார். மற்றொரு புகார்தாரர் காவல்துறை அதிகாரிகள் மசூதி மற்றும் மதரசாக்களை எரிப்பதற்கு முன்சூறையாடுவதை மேற்பார்வை பார்த்ததாகவும், அந்த சூறையாடப்பட்ட பொருட்களை பாஜக தலைவர் சத்யபால் சிங் வீட்டிற்கு எடுத்துச் செல்ல அவர்கள் பிறப்பித்த ஆணைகளை தான் கேட்டதாகவும் விவரித்துள்ளார்.

திரும்பத் திரும்பத் சொல்லப்படும் பெயர்கள்
ஏராளமான புகார்களில் திரும்பத் திரும்ப சொல்லப்படும் பெயர் சத்யபால் சிங், உத்தரப்பிரதேசத்தின் பாக்பத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். அவரையும் கபில் மிஸ்ராவையும் தவிர புகார்களில் குறிப்பிடப்படும் பாஜக பெயர்நந்து கிஷோர் குஜ்ஜார்; இவர் உ.பி. சட்டசபையில் லோனி தொகுதி உறுப்பினர்; லோனி வடகிழக்கு தில்லிக்கும் உத்தரபிரதேசத்திற்கும் இடையில், உ.பி. எல்லையில் உள்ள தொகுதி. அதிலிருந்து வடக்கே 25 கி.மீ. தூரம்சென்றால் பாக்பத் உள்ளது. புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள மற்ற பெயர்கள் மோகன் சிங் பிசித், இவர் வடகிழக்கு தில்லியின் கரவால் நகர் சட்டமன்ற உறுப்பினர்; ஜகதீஸ் பிரதான், இவர் தில்லி சட்டமன்றத்தில் முஸ்தபாபாத் தொகுதியில் போட்டியிட்டு அந்த தொகுதியை இந்த வன்முறைகளுக்கு சில மாதங்கள் முன் நடந்த தில்லி தேர்தலில் இழந்தவர்.

===பிரபி ஜித் சிங், அர்சு ஜான்===

தமிழில்: க.ஆனந்தன்

;