tamilnadu

img

பாஜகவின் எல்லையில்லா ஊழல்கள்

தான் ஊழல் தீண்டாத கட்சி என பாஜக பெருமை அடித்துக்கொள்கிறது. ஆனால் பா.ஜ.க. மத்திய அரசாங்கம் மட்டுமின்றி பல மாநில அரசாங்கங்களும் ஏராளமான ஊழல்களை செய்துள்ளன. 


ஊழல் பெயர் மாநிலம் தொகை/ரூபாய் குறிப்பு


விளம்பர ஊழல் மத்திய பிரதேசம் 14 கோடி


அதானிக்கு நிலம் குஜராத் 6,000 கோடி முதல் 14,300 ஏக்கர்நிலம் ஒரு சதுர அடி 10பைசாவுக்கு  தாரைவார்ப்பு1000 கோடி தாரை வார்ப்பு. மோடி முதல்வர்


பணமதிப்பு நீக்கம் ஊழல் குஜராத் 745 கோடி அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் 5 நாட்களில் 745 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் வந்தன. இந்த வங்கியில் அமித்ஷா இயக்குநர். அடுத்த 5 நாட்களில் கூட்டுறவு வங்கிகள் பழைய நோட்டுகளை வாங்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

பந்தல்காண்ட் வறட்சி மத்திய பிரதேசம் 2100 கோடி

நிவாரணம் ஊழல்

பட்ஜெட் ஊழல் சத்தீஸ்கர் 20,000 கோடி

உடல் ஆரோக்கிய ராஜஸ்தான் சுமார் 200 கோடி பமஷா உடல் ஆரோக்கிய காப்பீடு திட்டத்தில் திடீரென காப்பீடு ஊழல் நிறைய தொகை தரப்பட்டது. பின்னர் இது முறைகேடு என கண்டறியப்பட்டது.

பிட்காயின் ஹவாலா ஊழல் குஜராத் 88,000 கோடி BIT COIN எனப்படும் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் பல பா.ஜ.க. தலைவர்கள் ஈடுபட்டதாக குஜராத் குற்ற புலனாய்வுதுறை கண்டுபிடித்தது. நலின் கொட்டாடியா எனும் தலைவர் தலைமறைவு

அரசு அலுவலக வாடகை ஊழல் கோவா 5.5 கோடி குடியிருக்காமலேயே ஒரு வருடம் வாடகை தரப்பட்டது. கட்டிட உரிமையாளர் மனோகர் பாரிக்கரின் நெருங்கிய நண்பர். 

அஜித் தோவல் மகன் ஊழல் 8,300 கோடி பணமதிப்பு நீக்கம் நடந்த 13 நாட்களில் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மகன் விவேக் கறுப்பு பணத்தின் சொர்க்கங்களில் ஒன்றான கேமன் தீவுகளில் 8,300 கோடி முதலீடு செய்தார்.

சிட்ஃபண்ட் ஊழல் சத்தீஸ்கர் 484 கோடி 111 சிட்ஃபண்ட் நிறுவனங்கள் 1,33,697 ஏழைகளை ஏமாற்றினர். அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

அரசுப் பள்ளிகள் மூடுவிழா ஊழல் ராஜஸ்தான் 17,000 அரசு பள்ளிகள் 2 ஆண்டுகளில் மூடப்பட்டன. இதன்மூலம் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான தனியார் பள்ளிகள் பலன் அடைந்தன.

ஹெலிகாப்டர் வாங்கிய ஊழல் சத்தீஸ்கர் 900 கோடி

சித்துர்கியா நில பயன்பாடு மாற்றம் ஊழல் சத்தீஸ்கர் 400 கோடி

பங்கஜா முண்டேவின் கடலை மிட்டாய் ஊழல் மகாராஷ்ட்ரா 206 கோடி

பருப்பு பற்றாக்குறை ஊழல்  குஜராத் மற்றும் 2,50,000 கோடி செயற்கையாக பருப்பு வகைகளின் பற்றாக்குறையை ஏற்படுத்தி மகாராஷ்ட்ரா மக்கள் 200% கூடுதலான விலைக்கு வாங்க நிர்பந்திக்கப்பட்டனர்

பல் மருத்துவ கல்லூரி மத்திய பிரதேசம் 10,000 கோடி பணமதிப்பு நீக்கம்- நிலம் வாங்கும் படலம் பல மாநிலங்கள் கணக்கிட முடியாத அளவிற்கு பெரிய தொகை பணமதிப்பு நீக்கத்திற்கு முன்பும் பின்பும் ஆயிரக்கணக்கான இடங்களில் பினாமிகள் பெயரில் பா.ஜ.க. இடங்களை வாங்கிபோட்டது.

இ - டெண்டர் ஊழல் சத்தீஸ்கர் 4,600 கோடி

மின்சார ஊழல் மத்திய பிரதேசம் 180 கோடி

இ - டெண்டர் ஊழல் மத்திய பிரதேசம் 3,000 கோடி

தீ அணைக்கும் கருவி கொள்முதல் ஊழல் மகாராஷ்ட்ரா 191 கோடி

மீன்பிடி அனுமதி ஊழல் குஜராத் 10 கோடி மோடி முதல்வர்

நிலக்கடலைகொள்முதல் ஊழல் குஜராத் 2000 கோடி

நிலம் ஒதுக்கீடு ஊழல் குஜராத் 2,700 கோடி மோடி முதல்வர்

கோவா தொழில் துறை ஊழல் கோவா 82.60 கோடி

குஜராத் பெட்ரோலியம் நிறுவனம் ஊழல் குஜராத் 8600 கோடி மேலும் வங்கிகளிடம் வாங்கிய 19,000 கோடி திருப்பி செலுத்தப்படவில்லை. மோடி முதல்வர்

ஹட்கோ ஊழல் கர்நாடகா 14,500 கோடி பா.ஜ.க. அமைச்சர் ஆனந்த குமார் காலத்தில் நடந்தது

IL&FS நிறுவன நட்டம் முறைகேடு மத்திய அரசு 91,000 கோடி

இந்திரா பிரியதர்ஷினி சத்தீஸ்கர் 54 கோடி

மகளிர் வங்கி முறைகேடு

ஜெய் ஷா ஊழல் அமித் ஷாவின் மகன் 80 கோடி

கேமங் புனல் மின் நிலைய ஊழல் அருணாச்சலப்பிரதேசம் 450 கோடி

எல்&டி நிறுவனத்திற்கு குஜராத் 130 கோடி மோடி முதல்வர்

நிலம் ஒதுக்கீடு ஊழல்

முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் குஜராத் 28 கோடி

பட்டேலின் மகள் அனார் பட்டேலுக்கு

நில ஒதுக்கீடு ஊழல்

நில ஒதுக்கீடு ஊழல் உத்தர்கண்ட் 400 கோடி

நில ஒதுக்கீடு ஊழல் கர்நாடகா 24 கோடி சதானந்த கவுடா காலத்தில்

எல்.இ.டி. பல்பு கொள்முதல் ஊழல் ராஜஸ்தான் 2 கோடி

நில ஒதுக்கீடு ஊழல் மகாராஷ்ட்ரா 40 கோடி

மகாத்மா ஊரக வேலைத் திட்ட ஊழல் உத்தர்கண்ட் 25 கோடி

2010 கும்பமேளா ஊழல் உத்தர்கண்ட் 180 கோடி

சுரங்க ஊழல் ராஜஸ்தான் 45,000 கோடி

மருந்து கொள்முதல் ஊழல் மகாராஷ்ட்ரா 297 கோடி

தில்லி மாநகராட்சி பா.ஜ.க. தில்லி 244 கோடி

ஆட்சியில் ஓய்வூதியம் ஊழல்

கேரள பாஜக தலைவர் சதீஷ் நாயர் கேரளா 5.60 கோடி

மெடிக்கல் கவுன்சில் ஊழல்

நர்மதா மரக்கன்று ஊழல் மத்திய பிரதேசம் 102 கோடி

வட கச்சார் மலை ஊழல் அசாம் 1000 கோடி

நானோ கார் திட்டத்திற்கு சலுகை ஊழல் குஜராத் 33,000 கோடி நிலம், சாலைகள், நீர் ஆகியவை டாட்டா குழுமத்திற்கு அளித்தது. மோடி முதல்வர்

தேசிய வீட்டு வசதி ஊழல் மத்திய அரசு 1078 கோடி

நீட் தேர்வு ஊழல் மத்திய அரசு 3000 கோடி தகுந்த மதிப்பெண்கள் இல்லாத சுமார் 3000 பேருக்கு மருத்துவ கல்லூரி இடம் நபர்ஒருவரிடம் 1 கோடி லஞ்சம் பெறப்பட்டது.

ஓ.என்.ஜி.சி ஊழல் மத்திய அரசு 80 கோடி

நியாயவிலை கடை ஊழல் சத்தீஸ்கர் 36,000 கோடி

பியூஷ் கோயல் ஊழல்கள் மத்திய அரசு 730 கோடி பியூஷ் கோயல் மற்றும் அவரது மனைவி நிறுவனங்களை நடத்த வங்கிகளில் வாங்கி திருப்பி செலுத்தாத கடன் உட்பட 

ரபேல் ஊழல் மத்திய அரசு 60,000 கோடி

ஸ்மிருதி இரானி ஊழல் குஜராத் 6 கோடி

ஸ்பெக்ட்ரம் ஊழல் மத்திய அரசு 69,381 கோடி தனியார் டெலிகாம் நிறுவனங்களிடம் வாங்க தவறிய தொகை மத்திய கணக்காய ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில்.

நீர் மேலாண்மை ஊழல் குஜராத் 425 கோடி மோடி முதல்வர்

ஸ்வான் எனர்ஜி நிறுவன ஊழல் குஜராத் 13,600 கோடி மோடி முதல்வர். 14,300 கோடி மதிப்புள்ள நிறுவனம் டெண்டர் கோராமலேயே 381 கோடிக்கு தரப்பட்டது.

துவரம் பருப்பு விற்பனை ஊழல் மகாராஷ்ட்ரா 4,000 கோடி லோக் ஆயுக்தா அறிக்கை அடிப்படையில்

ரேஷன் பொருள் ஊழல் மகாராஷ்ட்ரா 6,300 கோடி சுய உதவி குழுக்களை உதாசீனப்படுத்தி கார்ப்பரேட்டுகளுக்கு டெண்டர் தர பங்கஜா முண்டே முயற்சி. உச்சநீதிமன்றம் தலையிட்டுதடுத்தது.

உஜ்ஜைன் கும்பமேளா ஊழல் மத்திய பிரதேசம் 2,700 கோடி

வியாபம் ஊழல் மத்திய பிரதேசம் பல கோடி ரூபாய் பல உயிர்களும் பலியாயின

தண்ணீர் வாரியம் ஊழல் குஜராத் 340 கோடி

நீர் ஆதார துறை ஊழல் மத்திய பிரதேசம் 8017 கோடி

எடியூரப்பா டைரி ஊழல் கர்நாடகா 1800 கோடி பா.ஜ.க.தலைவர்களுக்கு தரப்பட்ட லஞ்சம்


மேலும் நீரவ் மோடி, லலித் மோடி, மல்லையா ஊழல்கள் என பல உள்ளன. ஊழலில் ஈடுபட்ட எந்த மாநிலத்தின் அமைச்சரையும் மோடியோ அல்லது பா.ஜ.க.வோ தண்டித்தது இல்லை. பா.ஜ.க. ஊழலுக்கு அப்பாற்பட்டது என்பது மிகப்பெரிய பொய் மற்றும் மோசடி.



தொகுப்பு : அ.அன்வர் உசேன்

;