tamilnadu

img

தில்லியில் கலவரம் தூண்டியது ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல்களே - 2... முதல் நாள் இரவே இரண்டு லத்திகள் முறிந்துவிட்டன...

ஆலம் தயால்பூர் காவல் நிலைய சிறையில் நான்கு இரவுகள் வைக்கப்பட்டார். அவருடன்  வடகிழக்கு தில்லியில் கைது செய்யப்பட்ட  23 முஸ்லிம்கள் இருந்தனர். “முதல் நாளிரவு சில காவலர்கள் வந்தனர்; அதன் பிறகு அவர்கள் எங்களை விடாமல் அடித்து நொறுக்கினர். அவர்கள் குடித்திருந்தனர். அவர்கள் எங்களைமிகவும் மோசமாக தாக்கினர். ஆண்கள் யாரும்கழிவறையை பயன்படுத்த அனுமதிக்கப்பட வில்லை. நாங்கள் காவலர்களிடம் சிறுநீர் கழிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த போது,அவர்கள் எங்களிடம் நாங்கள் இருந்த அறைக்க்குள்ளேயே சிறுநீர் கழிக்க சொன்னார்கள். எங்களில் சிலர் கட்டாயம் கழிவறைக்குத்தான் செல்ல வேண்டும் என கோரிய போது, கழிவறைக்கு செல்லும் வழியெல்லாம் அவர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர். அதைப் பார்த்த நாங்கள் யாரும் கழிவறைக்கு செல்ல வேண்டும்என கோரவில்லை” என்கிறார் ஆலம்.

இத்தகைய அதிகார துஷ்பிரயோகம் கட்டாயம் மத ரீதியாக நடைபெற்றது. ஆலம் மேலும் சொல்கிறார்: “கைதிகள் “ஜெய் ஸ்ரீராம்” என கோஷமிட  வேண்டும் என்றும் பகவான் ராம் நாமம் வாழ்க என்றும் கோஷமிட வற்புறுத்தப்பட்டனர். குடித்துவிட்டு கைதிகளை அடிக்கும் காவலர்கள், அந்த அடிகளோடு தாங்கள் அன்று சுட்டு கொன்ற முஸ்லிம்கள் பற்றிபெருமை பொங்க விவரித்து கூறுவார்கள்.”முகம்மது ராஸி, தயால்பூர் பகுதியில்வசிப்பவர், அவரும் கைது செய்யப்பட்டவர் களில் ஒருவர். அவர் பிப் 24 தேதி மதியம் சுமார்2.30 மணிக்கு கைது செய்யப்பட்டதாக பின்னர்எங்களிடம் தெரிவித்தார்: “அன்றைய தினம்வேலையிலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். ஒரு காவல்காரர் என்னிடம் எனதுபெயரை கேட்டார். நான் பெயரைச் சொன்னதும்,அவருடைய  கையிலிருந்த கம்பால் என்னை அடித்து, போ, போய் அந்த வேனில் உட்கார் என்று சொன்னார். அவர்கள் காவல்நிலை யத்திற்கு திரும்பும் வழியில், மேலும் பல பையன்களை பிடித்துக் கொண்டு வந்தனர். காவல்நிலையம் வந்த போது மாலை மணி 4.30 இருக்கும்.”

ராஸியும் காவலில் இருந்த அடுத்த நான்குஇரவுகளில் நடைபெற்ற சித்ரவதைகளை  விவரிக்கிறார்: “அவர்கள் எங்களை கடுமையாக தாக்கினர். எந்தளவுக்கு மோசமாக என்றால் முதல் நாள் இரவே இரண்டு லத்திகள் முறிந்துவிட்டன” ராஸி மேலும் பேசும் போது, அவர்கள் எங்களை பெல்ட்டால் விளாசினார்கள், என்னை அந்த அறையில் இருந்த மின் உஷ்ணமேற்றியின் மீது சிறுநீர் கழிக்க  வற்புறுத்தினர். அந்த உஷ்ணமேற்றியில் மின் காயில் உஷ்ணம் கொடுத்துக் கொண்டிருந்தது. அதன் மீது சிறுநீர் கழித்தால் எனது பிறப்புறுப்பில் மின்சாரம் தாக்கிவிடும் என்பதால் நான் மறுத்தேன். “நான் அமைதியாக நின்று கொண்டிருந் தேன், எத்தனை அடி கொடுத்தாலும் சிறுநீர் கழிப்பதில்லை என்று உறுதியுடன் நின்றேன் பிறகு அவர்கள் என்னை விட்டு விட்டு சென்றுவிட்டனர்.”காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வர்களை அவர்களின் வழக்கறிஞர்கள் பார்க்கலாம் என மாஜிஸ்திரேட் அனுமதி அளித்தார்.

24 கைதிகளில் 5 கைதிகள் ஏற்கனவேநீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டி ருந்தனர். ஆலம் மற்றும் ராஸி இதர கைதிகளுடன் காவல்நிலைய லாக்-அப்பிலேயே வைக்கப்பட்டிருந்தனர். “அவர்களின் நிலையை பார்த்து நாங்கள் அதிர்ந்து விட்டோம் அவர்கள் நாறிக் கொண்டிருந்தனர். பலர் வெற்றுப்பார்வையுடன் எந்த அசைவும் இன்றி லாக்-அப்தரையில் அமர்ந்திருந்தனர்” என்று அவர்களைப்பார்க்க வந்த வழக்கறிஞர்கள் அதிர்ச்சியுடன் கூறுகின்றனர்.அவர்களை நேரில் பார்த்த அந்த வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, தில்லி காவல்துறை முதல்ஐந்து கைதிகளை ஆயுதங்கள் சட்டத்தின்படி பயங்கர ஆயுதங்களை வைத்திருந்ததாக குற்றம்சாட்டி நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றிருந்தது. நீதிமன்றம் அவர்களை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டது. அந்த 5பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டபோது, அவர்களுக்காக வாதாட வழக்கறிஞர்கள் யாரும் இல்லை. ஆனால், மீதமிருந்த 19 பேர் ஆஜர்படுத்தப்பட்டபோது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் இருந்தனர். அப்போது வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டவர்கள் காவலர்களால் லாக் அப்பில் சித்ரவதை செய்யப்பட்டார்கள் என்று குற்றம்சாட்டினர். காவல்துறைஅதனை மறுத்தது. மேலும், சட்டவிரோதமாக அவர்கள் 24 மணி நேரத்திற்கு மேல் லாக் அப்பில் வைக்கப்பட்டிருந்தனர் என்பதையும் காவல்துறை மறுத்து, அந்த 19 பேரும், அன்று காலையில்தான் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவித்தது. தயால்பூர் காவல் நிலையத்தில் பிப்.24 தேதி பதிவு செய்யப்பட்ட இரண்டு முதல்தகவல் அறிக்கையின் படி கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர்கள் முதலாவது முதல் தகவல் அறிக்கை எண் 57/2020 படி கைது செய்யப்பட்டதாக தெரிவித்தது. அந்தஎப்ஐஆர் ஒரு கோழிக்கடை மற்றும் ஷெர்பூர் சவுக்கில் ஏராளமான வாகனங்களை எரித்தது குறித்தானது. பிப் 23 தேதி இரவு நடந்த மதக் கலவரங்களில் நடைபெற்ற சம்பவம் குறித்த எப்ஐஆர். அந்த எப்ஐஆர், ஒரு சம்பவத்தில்கூட ஈடுபட்ட நபரின் பெயரைக் குறிப்பிடவில்லை. இரண்டாவது முதல் தகவல் அறிக்கை எண் 58/2020. இது வன்முறை குறித்து பொதுவான தகவல்களையே கொண்டிருந்தது. இந்த முதல் தகவல் அறிக்கையிலும் எந்த குற்றச் செயலில் யார் ஈடுபட்டார் என்ற தகவல் இல்லை. இந்த அறிக்கையின் அடிப்படையில் 9 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். எல்லாம் பொத்தாம் பொதுவாக தெரிவிக்கப்பட்டிருந்தது. காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டபோது கூட யார்எந்த எப்.ஐ.ஆர் படி கைது செய்யப்பட்டவர் என்பது குறித்து தெளிவில்லாமல் இருந்தது என்கின்றனர் வழக்கறிஞர்கள்.
 

;