tamilnadu

img

பொய் வழக்குகள்... போலி வாக்குமூலங்கள்.. தில்லியில் கலவரம் தூண்டியது ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல்களே - 3

காவல்துறை லாக்-அப்பில் இருந்த கைதிகளை சித்ரவதை செய்தனர்என்று குற்றம் சாட்டி, கைது செய்யப்பட்டவர் களுக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று வழக்குரைஞர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களுக்குஏற்கனவே மருத்து பரிசோதனை முடிந்துவிட்ட தாகக் கூறி, மருத்துவ பரிசோதனைக்கு காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மாஜிஸ்ரேட் மன்சந்தா வழக்குரைஞர்களின் வாதங்களை ஏற்று, தில்லி மண்டோலி மத்திய சிறைக்கு சென்றவுடன் மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். இதன் பின்னர்தான், ஆலமின் முதுகிலும், பின்புறத்திலும் பெரிய காயங்கள் இருப்பதையும், அவரின் இடது தொடை மற்றும் வலது தொடை மேல்புறத்திலும் பின்புறத்திலும் அடிபட்டு மருத்துவ அறிக்கையில் வீங்கியிருப்பது பதிவு செய்யப்பட்டது.

\அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது கூட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தாங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் என்னஎன்று தெரியாது. “விவாதிக்கப்பட்ட எதுகுறித்தும் எங்களுக்கு தெரியாது” என்றார்ராஸி. சிறைக்குச் சென்ற பிறகே ராஸிக்கு எப்ஐஆர் 58படி தன்மீது குற்றம்சாட்டப்பட்டுள் ளது என்றும், ஆலமுக்கு எப்ஐஆர் 57ன் படி தன்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றும் தெரியவந்தது.

யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்
ஆலமின் வழக்குரைஞர்கள் மார்ச் 11 அன்றுஅவருக்கு பிணை வேண்டி முதல் மனுவைத்தாக்கல் செய்தனர். அந்த பிணை கோரிக்கையில், காவல்நிலையத்தில் அவருக்கு நேர்ந்த சித்ரவதை, அவர் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதற்கு ஆதாரமாக காயங்கள் பற்றிய மருத்துவ அறிக்கை, கய் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம், மருந்துக் கடையில் மற்றும் மேல்மாடியில் இருந்த சிசிடிவி காட்சிகள் ஆகியவை தாக்கல் செய்யப்பட்டு நீதி மன்றத்திற்கு கொண்டுவரப்பட்டதிற்கு 4 நாட்களுக்கு முன் அவர்
கைது செய்யப்பட்டார் என்று வாதாடப்பட்டது. மேலும் அந்த மனுவில், “முதல் தகவல் அறிக்கையில் எந்த நபரின் பெயரோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஈடுபட்டது குறித்த விவரங்களோ எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை. அவ்வாறு இருந்ததால் அவர்கள் விரும்பும் யாரை வேண்டுமானாலும் கைதுசெய்துகொள்ளவாய்ப்பாக இருந்தது” என்றுதெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரி, ஹூக்கும் சிங் தில்லி காவல்துறை சார்பாக பதில் தாக்கல் செய்தார். அவர், ஷெர்பூர் சவுக்கில்பிப்28 அதிகாலை 3 மணிக்கு கலவரக்காரர்கள்கூடியிருப்பதாக தங்களுக்கு ஒரு தகவல் கிடைத்ததாகவும், அதனடிப்படையில் காவல்படை சென்று கைது செய்ததாகவும் தெரிவித்தார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் “பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்ததாகவும், அமைதியை சீர்குலைக்க முயன்றதாகவும், நாட்டிற்கு எதிராக கோஷமிட்டதாகவும், தீ வைத்ததாகவும், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாகவும்” அவர் மேலும் தெரிவித்தார்.  கைதுசெய்யப்பட்டவர்களை விடுவித்தால், கலவரங்கள் மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் வாதாடினார். மாஜிஸ்திரேட் வினோத் குமார் கௌதம், ஒரே மாதிரியான பத்து ஆணைகள் மூலம் முதல் தகவல் அறிக்கை 57/2020படி கைது செய்யப்பட்டவர்கள் அனைவருக்கும் பிணை மறுத்தார்.

வழக்கு ஜோடிப்பு
இந்நிலையில், ஆலமின் வழக்குரைஞர்கள் மற்றொரு பிணை மனுவை   செசன்ஸ் நீதிபதியின் முன் தாக்கல் செய்தனர். ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களுடன், காவல்துறை அதிகாரி ஹூக்கும் சிங்கின் பதிலையும் இணைத்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் எந்த அடிப்படையில் அடையாளம் காணப்பட்டனர் என்றோ, அவர்களின் பங்கு அல்லது குற்றச் செயல் போன்றவைகள் குறித்த எந்த விவரணையும் அவரது பதிலில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி சுதிர் குமார் ஜெயின் அந்த மனுவை நிராகரித்தார். ஆனால் குற்றம்சாட்டப்பட்ட ஆலமுக்கு எதிராக காவல்துறை ஒற்றை ஆதாரத்தைக் கூட சமர்பிக்கவில்லை என்பதைப் பற்றி ஒன்றுமே தனது தீர்ப்பில் நீதிபதி தெரிவிக்கவில்லை. அந்த பிணை மனுவை நிராகரித்து தீர்ப்பை எழுதிய நிதிபதி ஜெயின்,தனது தீர்ப்பில், “சம்பவம் நடந்த இடத்தில் ஆலம்பிடிபட்டார் எனவும், அவர் அப்போது பெரிய அளவில் வன்முறையிலும் கலவரத்திலும் ஈடுபட்டார் ”என்றும் தெரிவித்தார்.

அதன் பிறகு ஆலம் பிணை வழக்கு தில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நீதியரசர் முக்தா குப்தா காவல்துறை  விவரணைகளில் உள்ள முரண்களை சுட்டிக்காட்டி விரிவான ஆணை பிறப்பித்தார். காவல்துறை கண்ணால் பார்த்த இரண்டு சாட்சிகள் இருப்பதாக தெரிவித்து, ஆனால் ஒருவரிடம் மட்டுமே அறிக்கை பெற்றுள்ளது. அந்த அறிக்கையில் கூட, நீதிபதி குப்தா பதிவு செய்திருப்பது என்னவெனில், “அந்த அறிக்கையில் எந்த குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரையும் குறிப்பிடாதது ஆச்சர்யமளிக்கிறது” என்கிறார். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை ஏன் கேட்கவில்லை” என்பது விநோதமாக உள்ளது என்று தெரிவிக்கிறார். கடைசியாக சிசிடிவி காட்சிகள் குற்றம் சாட்டப்பட்டவர் 24ஆம் தேதியே கைது செய்யப்பட்டார் என்பதை நிரூபித்துள்ளது என்றும்தெரிவிக்கிறார். “சந்தேகத்திற்கே இடமில்லாமல், மனுதாரர் மற்றும் அவருடன் சேர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் கைதில் பல மர்மங்கள் சூழ்ந்திருக்கின்றன” என்று தெரிவித்து, அந்த சந்தேகங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக குற்றம்சாட்டப்பட்டவர்களின் உடலில் இருந்த காயங்களின் தன்மை உள்ளது என்றும் தெரிவிக்கிறார். காவல்துறை பதிவு செய்த வழக்கு சம்பந்தமாக இவ்வளவு சந்தேகங்கள் தெரிவித்த நீதிபதி,குப்தாவும் பிணை மனுவை நிராகரித்தார்.

போலி வாக்குமூலங்கள்
இந்த வழக்கில் காவல்துறை ஏப்ரல் மாதஇறுதியில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது பத்தில் ஒன்பது குற்றவாளிகள் அவர்கள்குற்றத்தை ஏற்றுக் கொள்ளும் அறிக்கைகளையும் காவல்துறை அத்துடன் இணைத்திருந்தது. இந்த அறிக்கைகளில் 7 அறிக்கைகள் ஒரே மாதிரியானவை- அதுவே பெரும்பாலும் இத்தகைய வாக்குமூலங்கள் பொய்யாக தயாரிக்கப்பட்ட வை என்பதற்கான குறியீடு-இதர இரண்டு வாக்குமூலங்கள் ஒன்றின் தொடர்ச்சி மற்றொன்றில் என குழம்பிக் கிடந்தன. ஏழு பேர் குற்றத்தை ஒப்புக்கொண்டு கொடுத்ததாக சொல்லப்படும் வாக்குமூலங்களில் வார்த்தைகள் கூட ஒரே மாதிரியாக இருந்தன. அந்த ஏழு பேரும் தங்கள் வாக்குமூலங்களில் “நாங்கள் மாற்று சமூகத்தை  சேர்ந்தவர்களை கம்புகளைக் கொண்டு அடித்தோம்.

நாங்கள் அங்கு வன்முறை சம்பவங்கள் நிகழ்த்த நின்று கொண்டிருந்தோம்“ என கூறியுள்ளனர். ஒன்பது வாக்குமூலங்களும் முடியும் போது இறுதி வாக்கியம் இதே வாக்கியமாக உள்ளது: “நான் தவறு செய்துவிட்டேன்; தயது செய்து என்னை மன்னித்துவிடுங்கள்”.ஒரு வழியாக ஆலம் கடைசியில் மே மாதமத்தியில் விடுவிக்கப்பட்டார், குற்றப்பத்திரி க்கை தாக்கல் செய்யப்பட்டபின், குற்றம்சாட்டப்பட்டவர்களை தொடர்ந்து நீதிமன்றக் காவலில்வைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றுஒரு நீதிபதி அவர்களை விடுவித்தார். முதல்தகவல் அறிக்கை 57ன் படி கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அவர்களின் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. முதல்தகவல் அறிக்கை 58ன் கீழ் உள்ளவர்கள் வழக்கு விசாரணைக்காக இன்னமும் சிறையில் உள்ளனர்.            

(தொடரும்....)
 

;