tamilnadu

img

பெங்களூரு : ‘பரவாயில்லை’ அல்ல... கவலைக்கிடம்

பெங்களூரு:
கோவிட் 19 தொற்றுப் பரவல் கர்நாடக மாநிலத்தில் குறிப்பாக பெங்களூருவில்  தீவிரமாகபரவி வருகிறது. கடந்த பதினைந்து நாட்களாகவே  தொற்று நோய் பரவல்  அதிகரித்து வருகின்ற போதிலும் ஊரடங்கு மேலும் நீடிக்கப்படாது என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு கூறியுள்ளார்.

தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த மாநில மருத்துவத்துறை அமைச்சர் சுதாகரின் குடும்ப உறுப்பினர்கள்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.ஆனால், மத்திய அரசின் சுகாதாரம் மற்றும்குடும்ப நலத்துறை அமைச்சகம், கர்நாடக பாஜகஅரசு தொற்று நோய் பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி உள்ளதாகப் பாராட்டிக் கொண்டிருக்கிறது. அறிவியல் தொழில்நுட்ப உதவியுடன் அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த குழுவினர் வைரஸ் தொற்றாளர்களின் தொடர்புத் தடத்தைக்கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களை  தனிமைப்படுத்தி விட்டனர்; 1.50 கோடி வீடுகளுக்கு  நேரடியாகச் சென்றும், தொலைபேசி மூலம் தொடர்புகொண்டும் தொற்றுக்கு ஆளாகக் கூடியவர் களை கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளது; இந்த வெற்றிகரமான அனுபவத்தை மற்ற மாநில அரசுகளும்பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு பாஜக மாநில அரசைப் பாராட்டியது.

பெங்களூருவில் நோய்ப் பரவலின் போக்கு
வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைப் பார்த்து கர்நாடகம் மற்றும் பெங்களூருவின் நிலைமை பரவாயில்லை என்று ஒருவர் எண்ணக்கூடும்.ஆனால், கவலை அளிக்கும் விஷயம் என்னவென்றால், பெங்களூருவில் தொற்றால்பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.இது பெங்களூரு சமூகப்பரவல் நிலையை அடைந்தது விட்டதையே உணர்த்துகிறது. அநேகமாக, பெங்களூருவில் பெரும்பாலோர் நோய்த்தொற்றைக் கடத்துநர்களாகவே இருக்கக்கூடும்.பெங்களூரு பெரு மாநகராட்சி ஆணை யாளர் அனில்குமார், கடுமையான நுரையீரல் பாதிப்புக்கு உள்ளானவர்களை எவ்வாறு நோய் தொற்றியது என்பது தெரியவில்லை. இதுவைரஸ் தொற்றின் சமூகப் பரவலாக இருக்க லாம் என்கிறார்.கோவிட் 19 பறக்கும் படை இயக்குநரும்,‌‌ ஜெயதேவா இதய நோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநருமான மருத்துவர் மஞ்சு நாத், பெங்களூரு சமூகப் பரவலுக்கு ஆட்பட்டு விட்டது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார்.ஊரடங்கு காலத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஊரடங்கு விதிமுறைகளை மீறியது நோய்ப் பரவலுக்கு முக்கிய காரண மாகும். மாநிலம் முழுவதும் ஊரடங்கு விதிகளை 
மீறியதாக 1.31 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், பெங்களூரில் மட்டுமே 58,832 விதிமீறல்கள் இருந்தன.

அரசு மருத்துவமனைகளின் நிலைமை
கொரோனா சிகிச்சைக்கான அரசு மருத்துவமனைகளின் நிலைமை கவலை அளிக்கிறது. ராஜீவ்காந்தி நெஞ்சக நோய் மருத்துவமனையில் கொரோனா சிறப்பு மருத்துவப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளவர்கள் “நாங்கள் பசியால் வாடுகிறோம். கொரோனாவைக் கூட நாங்கள் வென்று விடுவோம். ஆனால், அதற்குள்பசியாலேயே செத்துவிடுவோம்” என்று   கூறும் வீடியோ வைரலானது.

அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள்
பெங்களூருவில்,சமூக இடைவெளியை கடைபிடிக்க வாய்ப்பில்லாத இரண்டு பெரியசந்தைகள் மூடப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக் கென ஐம்பது சதவீத படுக்கைகளை ஒதுக்கவேண்டும். அங்கு அவசர சிகிச்சை படுக்கைமற்றும் வெண்டிலேட்டருடனான   சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ரூ.25000- என்று நிர்ணயிக்கப் பட்டுள்ளது. பாஜகவினரும், மூத்த அரசு அதிகாரிகளும் ஊரடங்கு தளர்வுதான்(1.0)  நிலைமை மோசமானதற்கு காரணம் என்று குற்றம்சாட்டுகின்றனர். ஆனால்,ஊரடங்கு காலத்தை பயன் படுத்தி பொது மருத்துவக் கட்டமைப்புகளை பலப்படுத்தாததே தீவிரமான தொற்று பரவலுக்கான முக்கிய காரணமாகும்.பெங்களூரு எச்பிஎஸ் மருத்துவமனை அறக்கட்டளை நிர்வாகி மருத்துவர் டாஹா மதீன்என்பவர் “அரசின் அணுகுமுறை கொடூரமான தாக உள்ளது;எமது சிறிய மருத்துவமனையில் கூட பத்து வெண்டிலேட்டர்கள் உள்ளபோது பெரு நகர அரசு மருத்துவமனைகளில் போதுமான வெண்டிலேட்டர்கள் இல்லை.முன்னரே ஏன் போதுமான வெண்டிலேட்டர்களை அரசு கொள்முதல் செய்யவில்லை” என்கிறார்.பெங்களூருவில் தீவிரமான தொற்று பரவலை இந்த நிலையிலேயே கட்டுக்குள்கொண்டுவராவிட்டால், அது ஏற்கனவே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த திணறிக் கொண்டிருக்கும்மும்பை, டெல்லி, சென்னை மற்றும் அகமதா பாத்துக்கும் பரவிடும் அபாயம் உள்ளது.

பிரண்ட்லைன் ஜீலை 17,2020 இதழில்  
அகமது சையத் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து...

- தொகுப்பு: ம.கதிரேசன்

;