tamilnadu

img

தொழிலதிபர்களின்  ரூ.8 லட்சம் கோடி  வங்கிக் கடனை தள்ளுபடி செய்த பாஜக அரசு  

புதுதில்லி,பிப்.23-  பெரும் தொழிலதிபர்களின் ரூ.8 லட்சம் கோடி வங்கிக்கடன் களை மத்திய பாஜக அரசு தள்ளு படி செய்துள்ளது என்று காங் கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி யின் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாட் தில்லியில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:  வங்கி வராக்கடன்களின் அளவு 11.7 சதவீதத்தில் இருந்து 9.2  சதவீதமாக குறைந்துவிட்டது என்று மத்திய அரசு சொல்லும். ஆனால் உண்மை வேறு. வங்கி கள் மிகப்பெரும் முதலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய் கின்றன. மொத்த கடன்களில் 16 சத வீதம் சிக்கலில் இருக்கிறது. இதன் மதிப்பு ரூ.16 லட்சத்து 88 ஆயி ரம் கோடி ஆகும். இது கடந்த டிசம்பர் மாத நிலவரம். 2017 ஆம் ஆண்டு இது 12 சதவீதம் ஆகும்.  இது இந்திய பொருளாதா ரத்தின் கடுமையான மந்த நிலை யின் தெளிவான அறிகுறி.   வங்கி பிரச்சனைகளில் தீர்வு காணப்படும் வரை இந்தியா வின் பொருளாதார அவல நிலையை  தீர்ப்பது சாத்தியம் இல்லை. பாஜக 2014 ஆம் ஆண்டு  மத்தி யில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ரூ.8 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான கடன்கள் பெரும் தொழில் அதிபர்கள் வாங்கி யவை. யாருடைய கடன்கள்  தள்ளுபடி செய்யப்பட்டிருக் கின்றன என்பது குறித்து ஏன் குறிப்பிடவில்லை? என்று தெரி வித்தார்.

;