சண்டிகர்:
பிரபல கிரிக்கெட் வீரர் சித்து, பஞ்சாப் மாநில உள்ளாட்சி, சுற்றுலா மற்றும் கலாச்சார விவகாரங்கள் துறைகளின் அமைச்சராக இருந்தார். இந்நிலையில் முதல்வர் அம்ரீந்தருடன் பல விவகாரங்களில் சித்து முரண்பட்டதால், அவரிடமிருந்த முக்கியமான துறைகள் பறிக்கப்பட்டு, புதுப்பிக்கத்தக்க மின் துறை அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார். எனினும், ஒரு மாத காலமாகியும் சித்து புதிய துறையை ஏற்காமல் பிடிவாதம் காட்டி வருகிறார். தனது ஆதரவாளர்களுடனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.