tamilnadu

img

நைஜீரியாவில் டாக்டர்களின் வேலைநிறுத்தம்

டாக்டர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் நிதி தோல்விகளின் காரணமாக நைஜீரியர்களை தொற்றுநோயின் விளிம்பில் விட்டுச்செல்கிறது .நைஜீரிய மருத்துவர்கள் மோசமான ஊதியத்தை பெறுவதால் .லாகோஸ் மாநில மருத்துவர்கள் ஜூலை 13 முதல் 15 வரை மூன்று நாள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர்.இதற்கு காரணம் ஊதிய பிரச்சனை மட்டும் அல்ல ,போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாததும் தான்.

ஜூலை 21 நிலவரப்படி, நைஜீரியாவில் 37,225 பேருக்கு  கோவிட் -19 உறுதிசெய்யப்பட்டது , 15,333 பேர் குணமாகி வீடு திரும்பினர் மற்றும் 801 இறப்புகள் என பதிவாகியுள்ளன. நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான லாகோஸ் மாநிலம் ,இந்த நோயின் மையமாக உள்ளது, இதில் 13,538 பேருக்கு  கோவிட் -19  உறுதிப்படுத்தப்பட்டது.அதில் 1,964 பேர் குணமானவர்கள் மற்றும் 176 பேர் இறப்புகள் என குலோபல் வாய்ஸ் செய்தி ஊடகம் அறிவிக்கிறது.

லாகோஸ் மாநில அரசு ஜூலை 13 ம் தேதி முன்னணி மருத்துவ ஊழியர்களிடம் பணிக்குத் திரும்புமாறு வேண்டுகோள் விடுத்தது. லாகோஸ் மாநில அரசின் வேண்டுகோளின்   காரணமாக மருத்துவர்கள் ஜூலை 16 ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தை நிறுத்தி வைத்தனர்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை  மீட்டெடுக்க நைஜீரிய  அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என வரும் காலங்களில் பார்ப்போம்.