tamilnadu

img

பறவைகள் கணக்கெடுப்பிற்கு அழைப்பு...

திருநெல்வேலி:
வண்ணமயமான வலசை பறவைகளை காண ஆர்வமா? ஆம் எனில்11வது தாமிரபரணி நீர்வாழ் பறவைகள்கணக்கெடுப்பில் கலந்து கொள்ளுங் கள். அகத்தியமலைக் காடுகளில் உற்பத்தியாகும் தாமிரபரணி மற்றும் அதன்கிளையாறுகள் தென் தமிழகத்தின் உயிர் நாடி. குடி நீர், விவசாயம் மற்றும் தொழிற்சாலை தேவைகளுக்கான நீரினை தாமிரபரணி குறைவில்லாமல் செழிப்பாக வழங்கி வருகிறது. மனிதர்கள் மட்டுமல்லாமல் எண்ணற்ற உயிரினங்களும் தாமிரபரணியைத்தான் ஆதாரமாக கொண்டுள்ளன.    

தாமிரபரணி மற்றும் அதன் கிளையாறுகள் பாய்ந்தோடும் திருநெல் வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான குளங்கள் உள்ளன. இக்குளங்களுக்கு வருடம் தவறாது தேவையான நீரினைதாமிரபரணி வழங்குகிறது.  லட்சக்கணக்கான பறவைகளின் குறிப்பாக குளிர் காலத்தில் வலசை வரும் பறவைகளின் புகலிடமாக உள்ளது இக்குளங் கள். திருநெல்வேலி மாவட்டத்தில் கூந்தன்குளம், விஜய நாராயணம், வடக்குகழுவூர், நயினார்குளம், இராஜவல்லிபுரம், மானூர் போன்ற குளங்கள், தென்காசி மாவட்டத்தில் வாகைக் குளம், துப்பாக்குடி போன்ற குளங்கள்மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பாகுளம், வெள்ளுர், கருங்குளம், ஆறுமுகமங்கலம், பெருங்குளம், மேல்புதுக்குடி சுனை போன்ற குளங்கள்பறவைகளின் சொர்க்க பூமியாக திகழ்கிறது. தாமிரபரணி நீர்நிலைகளில் காணப்படும் பறவைகளை கணக்கெடுக்கும் பணியினை உள்ளூர்மக்கள் பங்களிப்புடன் 2011ம் ஆண்டு முதல் அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வள காப்பு மையம், மணி
முத்தாறு மேற்கொண்டு வருகிறது.

11வது தாமிரபரணி நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஜனவரி  29 – 31ம்தேதி வரைநடைபெற உள்ளது. இக்கணக்கெடுப் பினை அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையத்துடன் இணைந்து நெல்லை இயற்கைச் சங்கம், திருநெல்வேலி, முத்துநகர்இயற்கைச் சங்கம், தூத்துக்குடி மற்றும்மாவட்ட அறிவியல் மையம், திருநெல்வேலி இணைந்து நடத்துகிறார் கள். கணக்கெடுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தன்னார்வலர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் லிங்கின் மூலம் https://forms.gle/D2CyJjAuc8R7RcHTA தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் அல்லது twbc2020@gmail.com  என்ற மின்னஞ்சல் வழியாகவும் அல்லது அ. சரவணன் அவர்களை 9994766473 என்ற எண்ணிற்கு அழைத் தும் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்ய கடைசி நாள் 26 ஜனவரி 2021. பதிவு செய்ததன்னார்வலர்களுக்கு 29 ஜனவரி 2021 அன்று முன்னீர்பள்ளம், முத்தமிழ் பள்ளியில் மதியம் 2 மணி அளவில் கணக்கெடுப்புக் குறித்த பயிற்சி வழங்கப்படும், பின்னர் 30, 31 ஆகியதேதிகளில் தன்னார்வலர்கள் பறவையியல் நிபுணர்களுடன் இணைந்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப் படுவார்கள். தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு தாமிரபரணி நீர்நிலைகளில் பறவைகள் காணப்படுகிறது, ஆனால் சமீப காலமாக இப்பறவைகள் வருகை புரியும் குளங்கள்ஆக்கிரமிப்பு, குப்பை கொட்டுதல்,ஆகாயத்தாமரை செடிகளின் பெருக் கம் போன்ற காரணங்களினால் பெரும் ஆபத்தை சந்தித்து வருகின்றன. அழிவிலிருந்து இக்குளங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இப்பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. உள்ளுர் மக்கள் அனைவரும் கணக்கெடுப்பில் கலந்துகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

;