உதகை, பிப். 22- உதகையில் கஞ்சா விற்ற வாலிபரை குண் டர் சட்டத்தில் போலீ சார் கைது செய்துள்ள னர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறி யதாவது, உதகை நகர்ப் புறத்தில் கடந்த 20 ஆம் தேதி ஒருவர் கஞ்சா மற்றும் போதை பொருட்களை இளைஞர்க ளுக்கு விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத் தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மடக்கி பிடித்த னர். அதன் பின்னர் நடந்திய விசாரணையில், அவர் உதகை நொண்டிமேடு ஒத்தமரம் பகுதியை சேர்ந்த பாபு என்பவரது மகன் சிவக்குமார் (37)என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிந்து சிவக்குமாரை கைது செய்தனர். பின்பு அவர் உதகை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக் கப்பட்டார். இந்நிலையில், போதைபொருள் விற்பனையை தடுத்திடும் நோக்கத்தோடும், இதுபோன்ற செயல் களில் ஈடுபடுவதை தடுத்திடும் வகையில், அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.சசிமோக னுக்கு, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் உத்தரவை யடுத்து கஞ்சா மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்த சிவக்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.