உதகை, செப். 7- குன்னூரில் ஞாயிறன்று பெய்த கனமழை கார ணமாக ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், தடுப்புச் சுவர் சரிந்து ஆற் றில் வாகனங்கள் கவிழ்ந் தது. நீலகிரி மாவட்டம், குன் னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந் நிலையில், ஞாயிறன்று இடி யுடன் கூடிய கனமழை பெய்தததில் சாலைகளி லும், ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இத னால், குன்னூர் விபி தெரு கிருஷ்ணாபுரம் அருகில் சாலையோரத்தில் நிறுத்தப் பட்டிருந்த இரு வாகனங்கள் எதிர்பாராதவிதமாக தடுப் புச் சுவர் இடிந்ததில் ஆற்றில் கவிழ்ந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல், மேல் குன்னூர் அம்பேத்கர் நகரில் வீடு ஒன்று இடிந் தது. இதில் இருந்த பெண் ஒருவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.