tamilnadu

img

மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.2.73 லட்சம் மதிப்பீட்டில் இருசக்கர வாகனங்கள்

நீலகிரி, ஜூன் 7- நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.2.73 லட்சம் மதிப்பீட்டில் 5 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட  இருசக்கர வாகனங்களை மாவட்ட ஆட்சி யர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வழங்கி னார். இந்நிகழ்வினைத் தொடர்ந்து  மாவட்ட ஆட்சியர் பேசியதாவது,  தமிழக முதல்வர் அறிவுறையின்படி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கோவிட் - 19 காரணமாக பொருளாதார சிர மத்திற்கு ஆளாகாமல் இருக்க மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் மூலம் பராம ரிப்பு உதவித்தொகை பெறும் 2 ஆயிரத்து 325 மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு மாதத்திற்கான தொகை (ஏப்ரல் 2020 (ம) மே 2020) ரூ.3 ஆயிரம் முன்கூட்டியே பட்டியல் தயாரித்து அவரவர் அஞ்சலக வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட் டது. மேலும், உதவி மையத்தின் மூலம் பெறப்பட்ட 69 மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையின் அடிப்படையில், அவரவர் குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறி தொகுப்புகள் மற்றும் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி கள் அவர்களது இருப்பிடத்திற்கே சென்று வழங்கப்பட்டுள்ளது.  

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனா ளிகளுக்கு தேவைப்படும் மருத்துவ உபகர ணங்கள் பெற்று வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இருகால் கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக ளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப் பட்ட இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத் தின்கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.54.06 ஆயிரம் வீதம் ரூ.2.73 லட்சம்  மதிப்பில் பயன டைந்துள்ளனர். கோவிட்-19 காரணமாக மாற்றுத்திறனாளிக்கு தேவையான உத விகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது என தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி உடனிருந்தார்.

;