tamilnadu

img

21 மாத நிலுவைத்தொகையை உடனே வழங்கிடுக தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் ஆர்பாட்டம்

உதகை, அக்.1- 21 மாத நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என  வலியுறுத்தி செவ்வயான்று தமிழ் நாடுஅரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்சங்கம் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு வழங்குவதுபோல் மாநில அரசு ஊழியர்களுக்கும் குறைந் தபட்ச ஓய்வூதியம், மருத்துவப்படியை வழங்க வேண்டும். காப்பீடு திட்டத்தை  நேரடியாக அரசே நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத நிலுவைத்தொகை வழங்க வேண்டும் ஒருமாத ஓய்வூ தியம் போனசாக வழங்க வேண்டும். அரசாணை 56-ஐ ரத்து செய்து காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, மற்றும் கிராம ஊழியர்களுக்கும் குறைந்த பட்ச ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதன்ஒருபகுதியாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு வட்டக்கிளையின் தலைவர் ஆர்.ராஜகோபால் தலைமை வகித் தார். மாவட்ட தலைவர் எச்.இ.சஞ் சீவிராஜ், துணைத்தலைவர் ஆர். குமார் வட்டக்கிளை செயலாளர் சுப்ர மணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். குன்னூர் வட்டக் கிளைத்தலைவர் ராமன் குட்டி, அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் கே.ஆனந்தன், கருவூலக கணக்குத் துறை ஊழியர் சங்க நிர்வாகி பி. விசுவநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். வுட்ட கிளை உதவி செய லாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திர ளானோர் கலந்து கொண்டனர்.  இதேபோல், கோத்தகிரியில் பஞ் சாயத்து அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட கிளைத்தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கோரிக்கை களை விளக்கி வட்ட கிளை செய லாளர் தயாளன் பேசினார். சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் கே. மகேஷ், வாலிபர் சங்க தாலுகா தலை வர் டி.சுந்தர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பொருளாளர் சேகர் நன்றி கூறினார். கூடலூர் தாலுகா அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு வட்ட கிளை துணைத்தலை வர் கே.வேலு தலைமை வகித்தார். செயலாளர் ஆர்.விஷ்ணுதாசன், பொருளாளர் எஸ்.தங்கராஜ் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்க நிர்வாகி ஹனீபா மாஸ்டர், அரசு ஊழியர் சங்க வட்ட கிளைத்தலைவர் சந்திரபோஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் பலர் கலந்து கொண்டனர்.  குன்னூர் தாலுகா அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு வட்ட கிளைத்தலைவர் பி. ராமன் குட்டி தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயலட்சுமி கோரிக்கை களை விளக்கி பேசினார். துணைத் தலைவர் ஆரோக்கியமேரி நன்றி கூறினர்.
கோவை 
கோவை தெற்கு தாலுகா அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு அரசு ஓய்வூதியர் சங்க வட்ட கிளை தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். தெற்கு வட்ட கிளை செய லாளர் விவேகானந்தன் வரவேற்புரை யாற்றினார். மாநில துணைத்தலை வர் சந்திரன், பிஎஸ்என்எல் ஓய்வூ தியர் சங்க நிர்வாகிகள் பங்கஜ வள்ளி, குடியரசு ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இதில் ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் வேலுமணி, ஜெய பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற் றனர். இதேபோல், கோவை சிவானந்த காலனி டாடாபாத் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.முரு கேசன் தலைமை தாங்கினார். ஓய்வூ தியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் என்.சின்னசாமி ஆர்ப்பாட்டத்தை துவக்கிவைத்து உரையாற்றினார். இதில், ஜே.ஆர்.சுப்பிரமணி, புஷ்பவள்ளி, சி.டி.ஸ்ரீதரன், ஆர்.இராஜகோபால் உள் ளிட்டோர் உரையாற்றினர். இது போன்று பொள்ளாச்சி, சூலூர், கிணத் துக்கிடவு, மேட்டுப்பாளையம் உள் ளிட்ட பல்வேறு வட்டக்கிளைகளி லும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;