தமிழக அரசு நீலகிரி மாவட்டத்தில் நிவாரணப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.,
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்துவெள்ளம், நிலச்சரிவு, போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டு மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் பொதுமக்களின் அன்றாடவாழ்வு பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 20க்கும்மேற்பட்ட நிவாரண மையங்களில், ஏராளமான குழந்தைகள், பெண்கள் உள்பட
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விவசாய சாகுபடிகள் பெரிதும் அழிந்துள்ளன.
தமிழக அரசு உடனடியாக இம்மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிடவும், பாதிக்கப்பட்ட விவசாயநிலங்கள் மற்றும் பயிர்கள், சேதமடைந்த வீடுகள், மரங்கள் உள்ளிட்டவைகளை கணக்கெடுத்துஉரிய நட்ட ஈடு வழங்கிட
வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
கட்சி அணிகளுக்கு வேண்டுகோள்:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வைகள், துணிமணிகள், வீட்டு பொருட்கள்உள்ளிட்டவைகளை சேகரித்து நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென கட்சியின்மாவட்டக்குழுக்களை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டுமென கட்சிதோழர்களை கேட்டுக் கொள்கிறோம்.