tamilnadu

img

சாலையை செப்பனிட பொதுமக்கள் கோரிக்கை

உதகை, நவ. 7- உதகையில் சிதலம டைந்த சாலையை சீர மைக்க மாவட்ட நிர்வாகம்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்குட்பட் டது 30 ஆவது வார்டு பிஷப் டவுன். இப்பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு செல் லும் சாலை பல ஆண்டுகளாக செப்பனிடப் படாமல் உள்ளது. சுற்றுலா காலங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இந்த சாலையை பலரும் பயன்படுத்திய வந்த னர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு பெய்த கனமழையின் கார ணமாக இந்த சாலையின் மேற்புறம் உள்ள விவசாய நிலங்களில் இருந்து அடித்து வரப்பட்ட மண் சாலையெங்கும்  பரவி  கிடக்கிறது. இதனால் இச்சாலையில் பய ணிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள் ளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந் தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும், மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை. எனவே, சிதலமடைந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.