உதகை, அக். 22 - உதகை டேவிஸ் டேல் செல்லும் சாலை குண்டும், குழியாக இருப்பதால் அதை சீரமைக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். உதகை டேவிஸ் டேல் சந்திப்பு அருகில் மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையானது இதன் சுற்று வட்டா ரங்களில் உள்ள எல்க்ஹில், குமரன் நகர், ரோஸ் கார்டன் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலை ஆகும். இச்சாலை குண்டும், குழியாக உள்ள தால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிர மத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வை யிட்டு உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.