tamilnadu

img

பாலம் கட்ட மனு போட்டால் வீடு கட்டி தருவதாக பதில் மனு !

உதகை,செப் .1- கூடலூரில் பாலம் கட்ட கோரிக்கை விடுத்து அனுப்பப்பட்ட மனுவிற்கு வீடு கட்டி தர நடவ டிக்கை எடுப்பதாக மனுதாரருக்கு பதில் மனு அனுப்பிய சம்பவம் அதிச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக மக்களின் குறைகளை தெரிவிக்க ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டது. அதனால் பல் வேறு தரப்பு மக்களும் தங்களது குறைகளை ஆன் லைன் மூலம் விண்ணப்பித்து வந்தனர். இந்நிலை யில், பந்தலூர் வட்டம் பொன்னானி விஷ்ணு கோவில் அருகில் ஆறு உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள்  ஆற்றை கடக்க மரத்தாலான சிறு பாலம்  அமைத்து பயன்படுத்தி வந்தனர். இந்தப்பாலம் சமீ பத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.  எனவே, இங்கு நிரந்தர பாலம் அமைத்து தர வேண்டும் என்று  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் செயலாளர் சிவசுப்பிரமணியன் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இருந்தார். இதனை யடுத்து சில நாட்களுக்கு முன்பு அவரது மனு குறித்து குறுஞ்செய்தி ஒன்று வந்தது.  அதனை பதி விறக்கம் செய்து பார்க்கையில் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றும் எதிர்வரும் ஆண்டில் மனுதாரருக்கு முன்னுரிமை அடிப்படை யிலும், உரிய சான்றிதழ்களின் அடிப்படையி லும் வீடுகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவ லர் தெரிவித்துக் கொள்வதாக கோரிக்கைக்கு சம்பந்தமில்லாமல் பதில் மனு அனுப்பப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது போன்று பொதுமக்களின் மனுக்களுக்கு அலட் சியமாக பதிலளிக்கும் அதிகாரிகளின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

;