உதகை, டிச.10- கனமழையால் ஏற்பட்ட மண்சரிவுகள் காரணமாக கடந்த எட்டு நாட்களாக ரத்து செய்யபட்டிருந்த மலைரயில் சேவை துவக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணி கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யத்தில் இருந்து உதகைக்கு மலைரயில் இயக்கப்பட்டு வருகிறது. உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த நூற்றாண்டு பழமைவாய்ந்த மலைரயி லில் பயணிக்க சுற்றுலா பயணிகள் பல ரும் வருகை தருகின்றனர். ஆனால் மழைக் காலங்களில் அடிக்கடி மண்சரிவுகள் ஏற்படுவதால் மலைரயிலின் பயணம் தடை பட்டு வருகிறது. கடந்த நவ.15 ஆம் தேதி இப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக மலைரயில் நிலையங்களுக்கிடையே பல்வேறு இடங்களில் மண் மற்றும் பாறை கள் சரிந்து விழுந்ததால் மலைரயில் சேவை நவ.29 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சேத மடைந்த பாலங்கள் சீரமைக்கப்பட்டு இரு நாட்கள் மட்டுமே மலைரயில் இயங்கியது. இந்நிலையில் மீண்டும் டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி இரவு பெய்த மிக கனமழை கார ணமாக மீண்டும் ரயில் பாதை மீது பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், திங்களன்று இரவு பணிகள் முழுமையாக முடிவடைந்தது. இதனையடுத்து கடந்த டிச.2 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட் டிருந்த மலைரயில் போக்குவரத்து செவ் வாயன்று மீண்டும் துவங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.