tamilnadu

img

தரமற்ற முறையில் கட்டப்படும் பசுமை வீடுகள் மலைவாழ் மக்கள் சங்கம் குற்றச்சாட்டு

உதகை, ஜூலை 25 - குன்னூர் அருகே  அரசு நிதியில் கட்டப்ப டும் பசுமை வீடுகள் தர மற்றதாக உள்ளதென மலைவாழ் மக்கள் சங் கம் குற்றம்சாட்டியுள் ளது. இதுகுறித்து, மலை வாழ் மக்கள் சங்கத்தின் நீலகிரி மாவட்ட செய லாளர் டி.அடையாள குட்டன் கூறியதாவது, நீலகிரி மாவட் டம், குன்னூர் தாலுகா மேலூர் ஊராட்சிக்குட்பட்டது மூப்பர்காடு. இங்கு 50க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள்  மண்ணினால் ஆன குடிசை அமைத்து வாழ்ந்து வந்தனர்.

இந்நி லையில், தமிழ்நாடு மலைவாழ் சங்கத்தின் பல கட்டப் போராட்டங்க ளுக்கு பிறகு அரசு சார்பில் வீடு கட்டிதர முன்வந்தது. இதனைத்தொ டர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் வீடுகள் கட்டப்பட்டு வந்தாலும் இது வரை இரண்டு வீடுகளை மட்டுமே கட்டி முடித்துள்ளனர். மேற்கொண்டு 7 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இன் னும் சிலரது குடிசைகள் வீடு கட்டுவ தற்காக இடிக்கப்பட்டு உள்ளது. இத னால் குடியிருக்க வீடு இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்ற னர்.

 இதற்கிடையே, அரசு சார்பில் கட் டப்படும் வீடுகள் தரமற்ற முறையில் இருந்து வருகிறது. இதனை அரசு  திகாரிகள் முறையாக கண்காணிக்காத தால், வீடுகட்டுவதில் முறைகேடும் நடைபெற வாய்ப்புள்ளது. ஆகவே, இந்த வீடுகளை உடனடியாக தரமான முறையில் கட்டிமுடிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீடு கட்டப்படுவதை கண்காணிப்பதுடன், தரமற்ற முறையில் வீடுகள் கட்டும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அரசு செவிசாய்க் காவிட்டால் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளாதாக அவர் தெரிவித்தார்.

;