உதகை, மார்ச் 19- கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் கூடும் இடமான பந்தலூரில் இந்திய ஜனநாய வாலிபர் சங்கத்தினர் கைக்கழுவ ஏற்பாடு செய்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு கைகளை நாள் தோறும் 10-க்கும் மேற்பட்ட முறை கழுக வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மக்கள் கூடும் இடமான பந்தலூர் பஜாரில் கைக் கழுவுவதற்கான ஏற்பாட்டினை செய்துள் ளனர். இதற்கான துவக்க நிகழ்ச்சி வியா ழனன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பந்தலூர் நகரச் செயலாளர் ஏ.ஜினேஷ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பி னர் ரமேஷ் துவக்கி வைத்தார். இதில் ஏரா ளமான வாலிபர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த ஏற்பாட்டிற்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.