உதகை,பிப்.12- நீலகிரி மாவட்டத்தில் குடி யுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டம் நடை பெற்றது. நீலகிரி மாவட்டம், கொளப் பள்ளியில் மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி கட்சியினர் குடியுரிமைச் சட்டத் திருத் தத்தைக் கண்டித்து செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக ஒன்றிய செயலாளர் சிவா னந்தராஜா தலைமை தாங்கி னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே ராஜன், மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் ஹனீபா மாஸ்டர், ரவிச்சந்திரன், திமுக மாவட்ட விவசாய தொழிலா ளர் அணியின் மாவட்ட செயலா ளர் ஆலன், விடுதலை சிறுத்தை கள் கட்சியின் நீலகிரி பாராளு மன்ற தொகுதி செயலாளர் ராஜேந்திர பிரபு ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு குடியுரிமைச் சட்ட திருத்தத்தைத் திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங் களை எழுப்பினர். இதேபோல், புதனன்று உத கையில் குடியுரிமைச் சட்டத் திருத் தத்தைத் திரும்பப்பெற வலி யுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன் னேற்றக் கழகத்தினர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழ கத்தின் மாவட்டச் செயலாளர் அப்துல் சமது தலைமை வகித்தார். மேலும், உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேசன், திமுக மாவட்ட செயலாளர் ப.முபாரக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எல்.சங்கரலிங்கம், மாவட்ட குழு உறுப்பினர்கள் வி.வி.கிரி, கே.ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கட் டாரியா உள்ளிட்ட ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். குன்னூரில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக கரம் கோர்த்து முழக்கங்களை எழுப்பினர்.