tamilnadu

img

சிபிஎம் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம்

உதகை, பிப். 29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் கூடலூரில் சனியன்று நடைபெற் றது. நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள பாடந்துறை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அர சியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு பாடந்துறை கிளைச் செயலாளர் ஏ.வி.ஜோஸ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்க ரன் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப் பினர் என்.வாசு, கேரள மாநிலம் வயநாடு மாவட்டக் குழு உறுப்பினர் சுரேஷ் தாளூர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.   மேலும், நீலகிரி மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் எம்.எம்.ஹனீபா மாஸ்டர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஏ.குஞ்ஞி முக மது,ஏ. யோகண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் எம் ஆர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.