tamilnadu

img

அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியது...  

நியூயார்க் 
கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்திற்கு அமெரிக்கா மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். தன் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் இருப்பதை பற்றி கொண்டுகொள்ளாமல் அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் சீனா, ஈரான்  போன்ற நாடுகளுடன் மோதல் போக்கை உருவாக்கி எப்படி தாக்குதல் நடத்தலாம் என்ற எண்ணத்துடன் அதற்கான வியூகம் வகுத்து வருகிறார். 

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 300 பேர் பலியாகியுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 61 ஆயிரத்து 656 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த ஒரே நாளில் அங்கு 28 ஆயிரத்து 429 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்து 64 ஆயிரத்து 194 ஆக உள்ளது. இதுவரை 1 லட்சத்து 47 ஆயிரத்து 411 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.     

குறிப்பாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில் 1000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
 

;