1923 - ஜெர்மனியின் பழைய நாணய மான பேப்பியர் மார்க்குக்கு, ஒரு லட்சம் கோடிக்கு (ஆம்! 1,000,000,000,000!) ஒன்று என்ற விகிதத்தில் புதிய நாணயமான ரெண்ட்டன்மார்க் மாற்றித்தருதல் தொடங்கியது. முதல் உலக்போருக்கான செலவு களுக்காக பிரான்ஸ் முதலான நாடுகள் கூடுதல் வரி களை விதித்தன. ஆனால், போரில் வென்று விடலாம், கைப்பற்றும் புதிய பகுதிகளிலிருந்து கூடுதல் வரு வாய் வரும், தோற்கும் நாடுகளிடமிருந்தும் பெருந் தொகையை இழப்பீடாகப்பெறலாம் என்றெல்லாம் கருதிய ஜெர்மனி, முழுமையாகக் கடன் வாங்கியே அனைத்து செலவுகளையும் செய்தது (பொருளாதார நோக்கமின்றி போரில்லை!) போரில் தோற்றபின், இழப்பீடாக 13,200 கோடி தங்க மார்க்(தங்கத்தின் அடிப்ப டையிலான ஜெர்மன் நாணயம்!) ஜெர்மனி தரவேண்டு மென்று பாரிஸ் அமைதி மாநாடு முடிவெடுத்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகள், போருக்கு வாங்கிய கடன்கள் ஆகியவற்றால் நாணய மதிப்பு மிகமோசமாகச் சரிய, ஏராளமான பேப்பியர் மார்க்குகளை ஜெர்மனி அச்சிட்டது. அதனால் ஏற்பட்ட வரலாறு காணாத பணவீக் கத்தைத் தொடர்ந்தே இந்தப் புதிய நாணயம் வெளி யிடப்பட்டது.
ஒரு நாணயத்தின் பொருட்கள் வாங்கும் திறன் (மதிப்பு) குறைதல் பணவீக்கம் என்றும், இவ்வாறு மிகப்பெரிய அளவில் நிகழ்வது அதிஉயர்(ஹைப்பர்) பணவீக்கம் என்றும் குறிப்பிடப்படுகின்றன. ரோமப் பேரரசில் மூன்றாம் நூற்றாண்டில் ஏற்பட்ட நெருக்கடி யின்போது உருவானதே உலகின் முதல் அதி உயர் பணவீக்கம்! அப்போது ஃபியட் கரன்சி என்னும் இயல் பான மதிப்பற்ற, உறுதிமொழி அடிப்படையிலான நாண யங்கள் உருவாகவில்லை என்பதால், தங்கத்திற்கு பதிலாகப் பிற உலோகங்களாலான நாணயங்கள் வெளி யிடப்பட்டு, சரிவுக்குக் காரணமாயின.
காகித ஃபியட் கரன்சியை முதலில் அறிமுகப்படுத்திய நாடான சீனா, தொடக்கத்தில் காகித நாணய அச்சடிப்பிற்கு கடுமை யான கட்டுப்பாடுகளை கொண்டிருந்தது. போர்ச் செலவு களுக்காக, 13ஆம் நூற்றாண்டுக்குப்பின் ஏராளமான காகித நாணயங்கள் அச்சிடப்பட்டதால் சரிந்து கொண்டேவந்த நாணய மதிப்பு, அதிஉயர் பணவீக்க மாக மாற, 1948இல் 18 கோடி யுவான் நாணயம்கூட அச்சடிக்கப்பட்டது! அவ்வாண்டில், 30 லட்சம் யுவான் என்பது ஒரு தங்க யுவான் என்ற விகிதத்தில் புதிய நாண யம் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அதன் மதிப்பும் அடுத்த ஆண்டிலேயே சரிந்தது. புரட்சிக்குப் பிந்தைய அரசு ரென்மின்பியை அறிமுகப்படுத்தியபின்னரே, சீனா நாணய மதிப்பு நிலைபெற்றது. வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களிலும், உலகின் பல நாடுகளி லும் அதிஉயர் பணவீக்கம் நிகழ்ந்திருக்கிறது. தற்போது வெனிசுலாவில் நிலவும் அதிஉயர் பணவீக்கம், 2019இன் இறுதியில் ஒரு கோடி சதவீதமாக உயருமென்று ஐஎம்எஃப் கணித்துள்ளது.
-அறிவுக்கடல்