tamilnadu

அமெரிக்காவுடன் பேச்சு நடத்த வாய்ப்பு இல்லை: ஈரான்

டோக்கியோ, மே 16-அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷெரீப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுடன் 2015-ம் ஆண்டு அணு ஆயுததவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஈரான் அரசுசெய்து கொண்டது. ஒபாமா காலத்தில்செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வ தாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். மேலும் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைவிதித்தது.இது அமெரிக்காவுக்கும், ஈரா னுக்கும் இடையே பிரச்சனையை ஏற்படுத்தியது. ஈரானை கருப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது. ஈரானைபுதிய ஒப்பந்தம் போட வைக்க வேண்டும், அந்த ஒப்பந்தம் அணு ஆயுதங்கள் மட்டுமின்றி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் கட்டுப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று அமெரிக்கா கணக்கு போடுகிறது. ஈரானின் எண்ணெய் வர்த்தகத்தை முற்றாக முடக்கவும் அமெரிக்கா முயன்று வருகிறது. இதனால் ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.இதற்கிடையில் ஈரான் வெளியுற வுத்துறை அமைச்சர் ஜாவேத் ஷரீப் தமது நாட்டுடன் வர்த்தக ரீதியில் தொடர்பு வைத்திருக்கும் நாடுகளுக்கு சென்று வருகிறார்.திங்கட்கிழமை இந்தியா வந்திருந்த அவர், தற்போது ஜப்பான் சென்றுள்ளார். அங்கு ஜப்பான் பத்திரிகை யாளர்கள் அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்துவீர்களா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு ஷரீப், ‘‘அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப் பில்லை’’ என்று கூறியதாக முன்னணி பத்திரிகை கியோடோ செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் இரு நாடு களுக்கிடையிலான பிரச்சனைக்கு விரைவில் தீர்வுகாண வாய்ப்பில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது.

;