டோக்கியோ
ஆசியக் கண்டத்தின் கிழக்கு எல்லை நாடான ஜப்பானின் மியாகி நகருக்கு அருகே பசிபிக் பெருங்கடல் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.1 என்ற கணக்கில் உருவான இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதம் மற்றும் உயிர்ச் சேதம் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. கடற்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.
பசிபிக் கடற்பரப்பிற்கும் அடியில் 41.7 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது என அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளதால் இந்த நிலநடுக்கம் அந்நாட்டு மக்களை கடும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.