tamilnadu

img

பத்தாண்டுகளில் அதிகம் பயன்பட்ட சொல் ‘அவர்கள்’

நியூயார்க், ஜன. 5- கடந்த பத்தாண்டுகளில் உலகில் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டது ‘அவர்கள்’ என்னும் பொருள் கொண்ட தெ (THEY) என்கிற ஆங்கில சொல்லாகும். வானிலை என்கிற பொருள் தரும்  கிளைமெட் (climate), இணைய பகடியை குறிப்பிடும் மீம் (meme) ஆகிய சொற்களை பின்னுக்கு தள்ளி ‘தெ’ முதலிடத்தை பிடித்துள்ளது. ஒருவர் ஆணா, பெண்ணா என்பதை அறிந்துகொள்ள முடியாத நிலை யில், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடை யிலான மொழியியல் வேறுபாடுகளை பயன்படுத்த விரும்பாதோர் ஆங்கில மொழியில் ‘தெ’ என்கிற சொல்லை பயன்படுத்துவதாக மொழி வல்லு நர்கள் கூறுகின்றனர். ‘தெ’ என்கிற சொல்லின் பயன்பாடு சமூகத்தில் அதிகரித்துவருவதை ஒரு போக்காக (Trend) மொழியியல் அறிஞர்கள் கருதுகின்றனர். ‘தெ’ இன்  ரசிகர்கள் ஆண்களுக்கும் பெண் களுக்கும் பாகுபாடு காட்டாமல் ஒரு அழகான, சமத்துவ சமுதாயத்தை கற்பனை செய்கிறார்கள் என்று  மொழியியலாளர்கள் மதிப்பிடுகின்ற னர். பாலின சமத்துவம் என்ற கருத்தை  உலகம் விரும்புகிறது என்பதற்கான அறிகுறியே ‘தெ’ க்கு கிடைத்துள்ள பிர பலம் எனவும் அவர்கள் கூறுகின்றனர். கடந்த முறை கூகுள் (google), வெப் (web) ஆகிய வார்த்தைகளே அதிக தேடுதலுக்கு உள்ளாகின. இம்முறை அந்த இடத்தை ‘தெ’ பிடித்துள்ளது.

;