tamilnadu

img

அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்குகிறது....  

நியூயார்க் 
உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் நாள்தோறும் பயங்கர பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தினமும் அங்குப் பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக 25 ஆயிரமாக உள்ளது. குறிப்பாகக் கடந்த 24 மணிநேரத்தில் அங்கு 25 ஆயிரத்து 409 கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 10 லட்சத்து 35 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 

மேலும் நேற்று ஒரே நாளில் அங்கு 2 ஆயிரத்து 470 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்குகிறது. இதுவரை 59 ஆயிரத்து 299 பேர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனவை வென்று வீடு திரும்பியுள்ளனர். அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க்கில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. அங்குத் தினமும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்கிறது. 

குறிப்பாக நியூயார்க்கில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தினாலே அமெரிக்காவில் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை இரண்டு மடங்காகக் குறையும். நியூயார்க்கில் இதுவரை 2.91 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   
 

;