tamilnadu

img

அமெரிக்காவில் 7 லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு 

நியூயார்க் 
உலகில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவில் மையம் கொண்டுள்ளது. அங்கு கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் இருப்பதால் எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது புரியாமல் அந்நாட்டு அரசு விழித்து வருகிறது. அமெரிக்காவில் தினமும் சராசரியாக 15,000-க்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்படுகின்றனர். அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தாலும் மக்கள் அதைக் கண்டுகொள்வதில்லை.  

இதனால் அமெரிக்கா கொரோனா பாதிப்பில் குறுகிய காலத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தற்போது அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  7 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 37 ஆயிரத்து 175 பேர் பலியாகியுள்ளனர். 63 ஆயிரத்து 510 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். கடந்த 6 மணிநேரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.