விமானத்திலிருந்து இந்த குண்டு வீசப்பட்டது. குண்டு விழுந்த இடத்திலிருந்து 500 அடி சுற்றளவில் இருந்த அனைவரும் அப்போதே ஆவியாகினர். ஹிரோஷிமாவில் வசித்த 3 லட்சத்து 50 ஆயிரம் பேரில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது. இந்த குண்டு வீச்சினால் ஏற்பட்ட கதிர்வீச்சில் பலர் நீண்ட காலம்நோய்வாய்ப்பட்டு இறந்தனர். பலர் உடல் ஊனமடைந்தனர்.குண்டுவெடிப்பின் மையப்பகுதியில் வெப்பநிலை 7,000 டிகிரி செல்சியஸ் (12,600 பாரன்ஹீட்) ஐ- எட்டியது, இது சுமார் மூன்று கிலோமீட்டர் (ஐந்து மைல்) சுற்றளவில் அபாயகரமான தீக்காயங்களை ஏற்படுத்தியது.குண்டுவெடிப்பின் போது எழுந்த ஒளியின் தீவிரம் (ப்ளாஷ்) காரணமாக தற்காலிகமாக, நிரந்தரமாக மக்கள் நிரந்தர குருட்டுத்தன்மை அடைந்தனர். அடுத்தடுத்து கண்புரை உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டதாக சி.ஆர்.சி நிபுணர்கள் கூறுகின்றனர்.மூன்று நாட்களுக்குப் பிறகு, நாகசாகி நகரில் “கொழுப்புமனிதன்” என்று அழைக்கப்படும் இரண்டாவது குண்டை அமெரிக்கா வீசியது. இதில் 74,000 பேர் கொல்லப்பட்டனர்.2016-ஆம் ஆண்டு பாரக் ஒபாமா தான் ஹிரோஷிமாவுக்கு விஜயம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதி ஆவார். ஆனால், அவர் தாக்குதலுக்கு மன்னிப்புக் கேட்கவில்லை, ஆனால் தப்பிப்பிழைத்தவர்களைத் தழுவி அணு ஆயுதங்கள் இல்லாத உலகிற்கு அழைப்பு விடுத்தார் என்பது கவனிக்கத்தக்கது.