tamilnadu

img

ஜப்பானில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.

இது குறித்து அமெரிக்கா புவியியல் மையம் கூறியதாவது, ஜப்பானில் சிபா கென் மாகாணத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.7 ரிக்டர் அளவுக்கு பதிவாகியுள்ளது.மேலும் இதன் ஆழம் 80 கிலோ மீட்டர் என தெரிவித்துள்ளது. 

தற்போதிய சூழ்நிலையில் சக்திவாய்ந்த ஹகிபிஸ் புயல் ஜப்பானை தாக்கி வருகிறது. இப்புயலினால் சுமார் 61 வருடங்களில் இல்லாத அளவு, மழையை ஜப்பான் சந்திக்க போவதாக அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் இந்த நிலநடுக்கம் ஆனது ஜப்பானை தாக்கியுள்ளது.