tamilnadu

img

நில உரிமையை பாதுகாக்க ஆக.15 கிராம சபையில் தீர்மானம்

சென்னை, ஆக. 10- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்  மானங்கள் குறித்து சங்கத்தின்  பொதுச் செயலாளர் பெ.  சண்முகம் வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- மத்திய பாஜக அரசு,  பன்னாட்டு பெருமுதலாளி களுக்கு வேளாண் நிலங்களை வளர்ச்சி, திட்டங்கள் என்ற பெய ரில் பல லட்சம் ஏக்கரை விவ சாயிகளிடமிருந்து வலுக்கட்டாய மாக பறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக தமிழகத்திலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமி ழக அரசு தொடர் நடவடிக்கை யில் ஈடுபடுவதை கண்டித்து போராடி வருகிறோம். அதன்தொடர்ச்சியாக ஆகஸ்ட் 15 அன்று தமிழகம் முழு வதும் நடைபெறும் கிராம சபை களில், வளர்ச்சி என்ற பெய ரில் வேளாண் நிலங்களை விவ சாயிகள் ஒப்புதல் இல்லாமல் கையகப்படுத்தக் கூடாது, உயர்மின் அழுத்த கோபுரம், எண்  ணெய் குழாய் பதிப்பு போன்ற வற்றை விளை நிலங்கள் வழி யாக செல்வதை தவிர்த்து மாற்று  பாதையில் செயல்படுத்த வேண்டும். காவிரி படுகை மாவட்டங்க ளில் பேரழிவை உண்டாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை  முழுவதும் ரத்து செய்து பாது காக்கப்பட்ட வேளாண் மண்டல மாக அறிவிக்க வேண்டும் போன்ற  கோரிக்கைகளை தீர்மானமாக அனைத்து கிராமசபை கூட்டங் களிலும் நிறைவேற்ற வேண்டும்.

சட்ட நகல் எரிப்பு

காலாவதியான சட்டத்தைப் பயன்படுத்தி மின்கோபுரம் அமைப்பதை கண்டித்து செப். 18  அன்று கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் நகல் எரிப்பு  போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2018-19 ம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காலதாமதமின்றி இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். கோவை முதல் பெங்களூர் தேவனக்குந்தி வரை குழாய் பதித்து பெட்ரோல் கொண்டு செல்லும் திட்டத்திற்கு ஏழு மாவட்டங்களில் விளை  நிலங்களை கையகப்படுத்து வதை கைவிட்டு, வழித்தடத்தை சாலை ஓரங்களில் அமைத்து செயல்படுத்தக் கோரி செப்டம்பர் 9 அன்று ஆட்சியர்களிடம் மனு  அளிக்கவும் முடிவு செய்யப்பட்ட தாக தெரிவித்திருக்கிறார்.