tamilnadu

img

400 ஆண்டுகள் பழைமையான வரலாற்றுச் சின்னம் கண்டெடுப்பு

வேலூர், ஆக. 13- திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர் ஆ.பிரபு, ஆய்வு மாணவர்களான பொ.சர வணன், ரா.சந்தோஷ்  உள்ளிட் டோர் திருப்பத்தூர்-சேலம் நெடுஞ்  சாலையில் உள்ள புலிக்குட்டை கிராமம் அருகில் ஏறக்குறைய 400  ஆண்டுகள் பழைமையான வர லாற்றுச் சின்னத்தைக் கண்டறிந்த னர். இது கி.பி.15-ஆம் நூற் றாண்டைச் சேர்ந்த ‘சதிக்கல்’ என்றும் கூறியுள்ளனர். இதுகுறித்து பேராசிரியர் ஆ.பிரபு கூறுகையில், “தமிழக வரலாற்றில் திருப்பத்தூர் வட்டா ரத்துக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. அதை நிறுவிட இவ்வட்டா ரத்தில் பல இடங்களில் கள ஆய்வு களை மேற்கொண்டு வருகி றோம். அதன் பலனாக கற்கா லம் தொடங்கி, கி.பி.16-ஆம் நூற் றாண்டு வரையிலான எண்ணற்ற தொல்லியல் சான்றுகளை புதி தாகக் கண்டறிந்து, ஆவணப்ப டுத்தி திருப்பத்தூரின் வரலாற்றுப்  பின்புலத்தினை அனைவரும் அறிந்திட வகை செய்துள்ளோம்” என்றார்.

தங்கபுரம் எனும் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் இரண்டு சிற்பங்கள் இருப்பதைக் கண்டறிந்தோம்.இச்சிற்பங்கள் அடர்ந்த முள் புதர்களுக்கு மத்தியில் உள்ள பாழடைந்த கிணற்றின் அருகே உயர்ந்த மண் மேட்டில் சிதைந்த  நிலையில் உள்ளன. மண் மூடி  இருந்த கல்லினைச் சுத்தம் செய்து  பார்த்தபோது, அது ஒரு ‘சதிக் கல்’ என்பது தெரியவந்தது. இச்  சதிக்கல்லில் உள்ள வீரன் இரண்டு கைகளிலும் ஆயுதங்  களை ஏந்தியவாறு வடிக்கப் பட்டுள்ளான் என்றும் அவர் தெரி வித்தார். இது 500 ஆண்டு கால வர லாற்றினை தன்னுள் வைத்துக் கொண்டு, கேட்பாரற்று அழிவு றும் நிலையில் உள்ளது. இது வேதனைக்குரிய ஒன்றாகும். பொதுமக்கள் இது போன்ற வர லாற்றுச் சின்னங்களைப் பாது காக்க முன்வர வேண்டும். தொல்  லியல் துறையினர் இவற்றை மீட்டு, காப்பகங்களில் வைத்துப்  பராமரிக்க ஆவன செய்ய வேண்  டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.