tamilnadu

ஆம்புலன்ஸ் மீது லாரிகள் மோதல் - மூவர் படுகாயம்

நாமக்கல், செப்.29- நாமக்கல் அருகே ஆம்புலன்ஸ் மீது மூன்று லாரிகள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் மூன்று லாரிகள், ஒரு தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டது. இந்த  விபத்தில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டு நர் பெரியசாமி மற்றும் காவல் உதவி  ஆய்வாளர் செல்வராஜ், தலைமைக் காவ லர் பார்த்திபன் உள்பட 3 பேர் படு காயங்களுடன் தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  முன்னதாக, விபத்து நடந்த இடத்தில் காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு இருக்கும்போது பின் னால் வந்த லாரி வேகமாக மோதியதால்  இந்த விபத்து நடந்தாக கூறப்படுகிறது. இது குறித்து புதுச்சத்திரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.