tamilnadu

img

கோழிக்கறி விலை கிடுகிடு உயர்வு

நாமக்கல், மே 21- கொரோனா அச்சம் காரணமாக குறைந்திருந்த  கோழிக்கறியின் விலை தற்போது கடந்த சில நாள்க ளாக தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்துகொண்டே வருகிறது. கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச்  மாதம் 18ஆம் தேதிமுதல் கோழிக்கறியின் விலை  தொடர்ந்து குறைந்து வந்ததால், கறிக்கோழி உற்  பத்தியாளர்கள் இழப்பைச் சந்தித்து வந்தனர். இந்நிலையில், கறிக்கோழியின் விலை கடந்த சில நாள்களாகவே தொடர்ந்து உயர்ந்து கொண்டே  வருகிறது. கடந்த 14 ஆம் தேதி உயிருடன் ஒரு கிலோ கோழி  128 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 19ஆம் தேதி கிலோவுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ரூ.130-க்கு விற்பனை ஆனது. அதனைத்  தொடர்ந்து வியாழனன்று (மே 21) மீண்டும் இரண்டு ரூபாய் உயர்ந்து உயிருடன் கோழி கிலோ  132 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது குறித்து கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கூறுகையில், ”தமிழ்நாடு, கேரளாவில் கோழிக்கறி தேவை அதிகமாக ஏற்பட்டதால், விலை வேகமாக  உயர்ந்துள்ளது. தற்போது உற்பத்தி அதிகரிக்கப் பட்டுள்ள நிலையில், ஒரு சில நாள்களுக்குப் பிறகு  விலை குறைய வாய்ப்புள்ளது” என்றார். தற்போது  ஒரு கிலோ கோழிக்கறி ரூ.230 முதல் ரூ. 270 வரை  விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் முட்டை விலை ரூ 3.55 காசுகளாக உள்ளது.

;