tamilnadu

அமைப்புசாரா தொழிலாளர்கள் இணையதளத்தில் உறுப்பினராக பதிவு செய்யும் முறை அறிமுகம்

நாமக்கல், ஜூலை 5-  தமிழ்நாடு தொழிலாளர் துறையின் கீழ் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் தங் களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ள இணையதளத்தில் பதிவு செய் யும் முறை நாமக்கலில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதென தொழிலாளர் உதவி ஆணை யர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) தெரி வித்துள்ளார்.  

இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலன் களை பாதுகாப்பதற்காக தமிழ்நாடு தொழி லாளர் துறையின்  கீழ் 17 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் இயங்கி வரு கின்றன. இந்த நல வாரியங்களில் தொழி லாளர்கள் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்வதற்காக மாவட்ட அளவிலான தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) அலுவலகங்களுக்கு இதுவரை நேரடியாக செல்ல வேண்டியி ருந்தது.

இந்நிலையில் தற்போது கொரோனா சூழலில் அமைப்புசாரா தொழி லாளர் நலத்துறை அலுவலகத்திற்கு வரா மல் இணைய தளத்தில் உறுப்பினராக பதிவு செய்யும் முறை நாமக்கலில் அறிமுகப்ப டுத்தப்பட்டுள்ளது. நல வாரியத்தில் பதிவு செய்யாத தொழி லாளர்கள் https://labour.tn.gov.in என்ற இணைய தளத்தில் தொழிலாளர்களின் அலைபேசி எண்ணை பதிவு செய்து, பின் பெயர், பிறந்த தேதி, முகவரி, வேலையின் பெயர் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.

மேலும் வயது சான்று, ரேசன் கார்டு, வங்கி பாஸ்புக், தொழிற்சங்க பிரதிநிதி, தொழிலாளர் உதவி ஆய்வா ளர், வேலை அளிப்பவர், வி.ஏ.ஒ., ஆகியோ ரிடம் பெற்ற ஆவணங்களை பி.டி.எப்ஃஜே.பி.ஜி வடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதையடுத்து, தொழிலாளர் பதிவு நிலையை அறியும் குறிப்பு எண் குறுஞ்செய்தி வழியாக அனுப்பப்படும்

.  மேற்கண்ட விபரங்கள் சரியாக இருக் கும் பட்சத்தில் தொழிலாளர் நேரடியாக தங் கள் பதிவு சான்றினை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என, நாமக்கல், தொழிலாளர் உதவி ஆணை யர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்)  தெரிவித் துள்ளார்.

;